Delhi Pogrom

பி.எஃப்.ஐ இன் டெல்லி தலைவர், செயலாளர் கைது வேட்டைக்கு பி.எஃப்.ஐ கண்டனம் – போராட்டத்துக்கு அழைப்பு ..

பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது வேட்டையை எதிர்த்து போராடுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் தில்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால் “டெல்லி கலவரத்தின் போது மக்களைத் தூண்டினர்” என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெயரிடப்படாத தில்லி காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டிய IANS ஊடகம் “மக்களைத் தூண்டுவதில் பங்கு வகித்ததற்காகவும், டெல்லி வன்முறைக்கு “நிதியளித்ததாகவும் ” மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்:

PFI ஐயின் தேசிய பொதுச் செயலாளர் அணீஸ் அகமது கூறுகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. உண்மையில், இலக்கு வெறுமனே ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்ல, மாறாக CAA-NPR-NRC ,டெல்லி படுகொலைகள், மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மறைமுக திட்டங்களை எதிர்க்கும் அனைத்து குரல்களும் முயற்சிகளும் குறிவைக்கப்படுகின்றன. இந்த கைது நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

PFI ஐயின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்படுவதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் இன்று ஜந்தர் மந்தரில் நேற்று ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளது.