பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள் நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் […]
முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் ‘ஹிந்துத்துவா பாப்’ இசை பாடல்கள் !
புது தில்லி, இந்தியா – “இன்சான் நஹி ஹோ சாலோ, ஹோ தும் கசாயி; “பஹுத் ஹோ சுகா ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” – நீங்கள் மனிதர்களே அல்ல, கசாப்புக் கடைக்காரர்கள்; இந்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எல்லாம் போதும். பாடகர் பிரேம் கிருஷ்ணவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு ‘பஜன்’ (பக்தி பாடல்) பாடல் வரிகள் இவை. சமகால வெறுப்பு அரசியலால் தூண்டப்பட்டு, கிருஷ்ணவன்ஷியின் பாடல் இந்தியாவில் ஒரு புதிய வெகுஜன கலாச்சாரத்தின் […]
அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!
அனில் அம்பானி முன்பு செல்வந்தர்தான் ஆனால் இப்போது அவரிடம் எதுவும் இல்லை என லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதம் வைத்திருந்த நிலையில் தற்போது அது பொய் என அம்பலம் ஆகியுள்ளது.வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், ரூ800 கோடிக்கு மேல் அனில் அம்பானிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் முதலீடுகள், கணக்கில் வராத சொத்துகள், இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் […]
கத்தார்: இடைநீக்க நடவடிக்கை மட்டும் போதாது; மன்னிப்பு கேட்க வேண்டும்; கண்டனம் தெரிவிக்க வேண்டும் !
முஹமத் நபிக்கு எதிரான கருத்துகளுக்கு இந்திய அரசிடமிருந்து பகிரங்க மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களாக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால், முஹம்மத் நபிக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக கடும் அதிருப்தி மட்டுமின்றி, அக்கருத்துக்களை முழுமையாக நிராகரித்து, கண்டனத்தை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ குறிப்பை அவரிடம் அளித்தது. நுபூர் ஷர்மாவை இடைநீக்கம் […]
ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம் முதல் அபராதம் வரை;புதிய ரயில்வே விதிகள்!
இந்நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. ரெயில்களில் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்காக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், நீங்கள் பதிவு செய்யாமல் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். இந்த புதிய விதிகளின்படி, நீங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து 35 கிலோ முதல் 70 […]
‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி
கொச்சி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]
‘பிரதமர் மோடி எனக்கு சிறந்த முறையில் கிச்சடி சமைக்க கற்றுக் கொடுத்தார்’ – பாஜக தலைவரின் மனைவி பேட்டி..
உள்ளூர் பாஜக தலைவர் தீபக் சர்மாவின் மனைவி சீமா ஷர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1997ஆம் ஆண்டு நவராத்திரியின் போது, நான் பிரதமர் மோடிக்கு கிச்சடி சமைத்து கொடுத்தேன், ஆனால் அது அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பின்னர் மோடி எனக்கு எப்படி கிச்சடி உணவு சமைக்க வேண்டும் என்று காட்டினார். சிம்லா: பிரதமர் நரேந்திர மோடியின் சிம்லா பயணத்தின் ஒரு நாள் கழித்து, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், 90களின் பிற்பகுதியில் கட்சியின் இமாச்சலப் […]
மும்பை: பாஜக தலைவர் மோஹித் மீது ரூ.52 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு !
மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக […]
உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !
உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]
திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !
திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]
“‘தீவிரவாதி’ பட்டம் இனி இல்லை, இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”
யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஐந்து பேரில் ரஷித் மற்றும் ஷாஹித் ஆகியோர் அடங்குவர். முஹமது ரஷீத்தின் வாடிக்கையாளர்கள் அவரை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைத்ததால் ரஷித்தின் தந்தை தனது கடையை மூட வேண்டியதாயிற்று. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கதவைத் தட்டியபோது இழந்த வேலையை ஷாஹித் இன்னும் திரும்பப் பெறவில்லை. அதுவே அவரது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. “பயங்கரவாதி என்ற முத்திரையுடன் நான் வாழ… எனது […]
கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !
பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
வெறுப்பு பிரச்சாரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு -இந்திய கத்தோலிக்க யூனியன்
புதுடெல்லி: சமீப காலமாக இந்தியாவில் மத நல்லிணக்கதிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மிகப்பெரிய மற்றும் பழமையான கிறிஸ்தவ அமைப்பான அகில இந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஆரம்பத்திலேயே தக்க முறையில் கட்டுபடுத்த தவறினால், அது தேசிய அமைதி மற்றும் சேதத்திற்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் என்றும் கிறிஸ்தவ அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த போக்கை மாற்றியமைக்கவும், […]
திப்பு சுல்தானின் அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாம் !
கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது. நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]
தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!
ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: […]