ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]
கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !
கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) […]
ம.பி: ரேஷன் கார்டு மற்றும் வீடு தருவதாக கூறி மதமாற்றம்; இந்துக்களாக மாறிய 18 முஸ்லிம்கள் !
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தில், 18 முஸ்லிம்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் இந்தி பேட்டியை சிறிய மாறுதல்களுடன் கீழே வழங்குகிறோம். பசுவின் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு குளித்து,ஷேவிங் செய்து, இவர்கள் இந்து சனாதனவாதிகளாக மாறி உள்ளனர். டைனிக் பாஸ்கர் இந்த கிராமத்தை அடைந்து மதமாற்றம் பற்றி விசாரித்தபோது, இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வறுமை மற்றும் பசி […]
தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!
கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]
கோவை: ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க ஆர்ப்பாட்டம் !
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஈஷாவில் […]
மலேசியா : முருகன் கோவில் முன் நின்று நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்து ராஷ்டிரம் கோரியும் வீடியோ வெளியிட்ட நபர்கள் கைது !
முஹம்மத் நபி குறித்து இழிவாக பேசிய முன்னாள் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக மலேசியாவில் உள்ள (Batu caves) பத்து குகைகளில் நின்று கொண்டு ஆதரவு தெரிவிக்கும் காணொளி டிக்டோக்கில் வைரலால் ஆனதை தொடர்ந்து நான்கு நபர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். 18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இந்தியாவிலும் நேபாளிலும் இந்து ராஷ்டிரம் கோரியும், நுபுர் ஷர்மாவின் நபிகளார் குறித்தான இழிவான பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசப்பட்டுள்ளது.முருகன் கோவிலில் நின்று […]
ஜெர்மனி : “மோடி ஆட்சியின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக” போராட்டத்திற்கு அழைப்பு !
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்த உள்ள ஜெர்மனி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அங்குள்ள ஜனநாயக அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க், (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் – என்ஆர்ஐ அமைப்பு) ஜெர்மனியின் […]
ஜார்கண்ட் : நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக தலைவர் கைது!
ஜார்கண்ட் : பாஜக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகவும், நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் கருத்தை பதிவிட்டதற்காகவும் பாஜக தலைவர் அனிஷா சின்ஹாவை ஆதித்யபூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதித்யபூர் நிஷாந்த் விஹார் காலனியில் வசிக்கும் அனிஷா செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதுபோன்ற ஒரு வழக்கில், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அனிஷா மீது ஐபிசி பிரிவு 295A (திட்டமிட்டு […]
உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]
குஜராத்: 35% கட்டிடங்கள் சட்டவிரோதமானவை என ஆய்வில் தகவல்!
8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது. குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் […]
உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !
பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]
தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!
கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]
ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !
கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]
இந்தியா உக்ரைன் இடையிலான ராணுவ ஒப்பந்த ஊழலை புதைத்த மோடி அரசு !
ரபேல் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் மோடி அரசின் மீது உக்ரைன் ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்த விவகாரம் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் பெரும் முன்னரே புதைக்கப்பட்டு விட்டது குறித்து தற்போது டிஎம்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு உக்ரைன் ₹17.55 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழலை மோடி அரசு எவ்வாறு புதைத்தது: 👇 […]
மொயீன் அலி ஐபிஎல்லைப் புறக்கணிக்கப்போவதாக வைரல் ஆகும் ட்வீட் உண்மையா?
முஹம்மத் நபி குறித்து நுபுர் ஷர்மா கூறிய அவதூறான கருத்துக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்த கருத்து என கூறி, அவரது பெயரில் செயல்படும் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று ஐபிஎல் கிரிக்கட் போட்டியை புறக்கணிக்கப்போவதாக ட்வீட். @Moeen_Ali18 என்ற ட்விட்டர் பயனர் “இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் எந்த ஒரு கிரிக்கட் போட்டியிலும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது […]