யோகா செய்வதும், இந்து மதப் பாடலான காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து குணப்படுத்த உதவுமா என்பதை தீர்மானிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், (ரிஷிகேஷ்) மருத்துவ பரிசோதனையை நடத்தி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவ சோதனைக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்று இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. “மிதமான அறிகுறிகள்” கொண்ட 20 […]
கேரள முதல்வருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு: அமலாக்கத்துறையினர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு !
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மத்திய விசாரணை நிறுவனமான அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மீது கேரள காவல்துறை வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள முதலமைச்சருக்கு எதிராக பொய்யாக குற்றம்சாட்டிட அமலாக்க துறை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஸ்வப்னா கூறியுள்ளதன் அடிப்படையில் கேரள போலீசார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். சதி, அச்சுறுத்தல் மற்றும் தவறான அறிக்கையை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துதல் போன்ற ஜாமீனில் வெளிவராத குற்றங்களின் பேரில் எஃப்.ஐ.ஆர் […]
தெலுங்கானா கலவரம்: 150 இந்து வாகினி அமைப்பினர் கைது; பாஜக எம்பி கைதுக்கு கண்டனம் – மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மிரட்டல் !
தெலுங்கானா: கடந்த மார்ச் 7 ஆம் தேதி பைன்சாவில் நடந்த இனக் கலவரத்தைத் தூண்டியது வலதுசாரி அமைப்பான இந்து வாகினி என்று தெலுங்கானா மாநில காவல்துறை (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இத்தீவிர இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர்களான தோட்டா மகேஷ் மற்றும் டட்டு படேல் ஆகிய இருவரால் கலவரம் தொடங்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மார்ச் 7 ம் தேதி பைன்சா நகரில் வன்முறை வெடித்தது, இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். நான்கு வீடுகள், 13 […]
கேரளா: நான் பாஜக வை சேர்ந்தவன் கூட இல்லை ; என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்- மணிகண்டன் அதிர்ச்சி !
சுல்தான் பத்தேரி: இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பாரதீய ஜனதா கட்சி வயநாடு மாவட்டத்தில் கடும் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. 115 தொகுதிகளுக்கான பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டபோதும், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் இன்னும் பொருத்தமான வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மனந்தவாடி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.மணிகண்டன், போட்டியிட மறுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேரள […]
நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! – மே 17 இயக்கம் கண்டனம்
எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை அடியோடு தடுத்தும் நிறுத்தும் செயலாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் […]
திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? – ஓர் அலசல் பார்வை
திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா? இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே […]
2021 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ளார் அதானி; அமேசான் ஜெப் பேஸாஸ் , எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி சாதனை!
குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, கோவிட் -19 தொற்றுநோய் பரவி மக்கள் எல்லாம் முடங்கி போயிருந்த நிலையிலும் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார், அவர் சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலகில் அதிக அளவில் தன் செல்வத்தை பெருக்கியவர் என்ற பெருமையை அடைந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அட்டவணை 2021 ஆம் ஆண்டில் இதுவரை அதானி 16.2 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளதாகக் தெரிவித்துள்ளது, அவருடைய மொத்த நிகர மதிப்பு 50 பில்லியன் டாலராக உள்ளது. […]
‘பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க’ – விவசாயிகள் கூட்டமைப்பு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தல் !
விவசாயிகள் மற்றும் மேற்கு வங்காள மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) வலியுறுத்தி உள்ளது. தேர்தல் தோல்வி மூடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக அரசை கட்டாயப்படுத்தும் என்று எஸ்.கே.எம். தெரிவித்துள்ளது. “நாங்கள் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவில்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறவில்லை, ஆனால் பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே […]
தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி பெயரை குறிப்பிட அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தியது: குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர்..
கேரளாவின் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி, பிற மாநில அமைச்சர்கள் மற்றும் இந்த வழக்கில் ஒரு முக்கிய நபரின் மகன் ஆகியோரை பெயரிடுமாறு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை அதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சந்தீப் நாயர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் ..
கடந்த மார்ச் 8ம் தேதி அன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் சுர்குடாவில் ஒரு கிறிஸ்தவ தனியார் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கே சென்று வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் இரவு 8.30 மணியளவில் ஜாகு என்ற நபருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றுள்ளது, அவ்விடத்தில் சுமார் 30 பேர் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். கும்பலில் இருந்த சிலர் ஆயுதங்களை வைத்திருந்தாகவும், […]
‘மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்’ – பாஜக அமைச்சர்
கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்காக வேத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாஜக வின் மத்திய பிரதேச கலாச்சார அமைச்சர் உஷா தாக்கூர், கடந்த மார்ச் 7 அன்று வலியுறுத்தி பேசினார். மாட்டு சாணதின் ‘ஹவானை’ (மாட்டு சாணத்தை யாகத்தில் எரிக்கும் போது வெளிப்படும் புகை) கொண்டு ஒரு வீட்டை 12 மணி நேரம் வரை சுத்திகரிப்புடன் வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து […]
மங்களூரு: கோவில் உண்டியலை திருடிய பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர் கைது..
மங்களூரில் உள்ள மான்டேபடாவ் பகுதியில் இந்துத்துவா இயக்கமான பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஒருவர் கோயிலின் உண்டியலை திருடி, கையும் களவுமாக சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவரை பிடித்த உள்ளூர்வாசிகள், கோனாஜே போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் அப்பகுதியில் இரு சக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பில் அங்கம் வகித்துள்ளார். இது குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர் மோன்டேபாதாவைச் சேர்ந்த […]
உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள தர்கா முபாரக் கான் ஷஹீத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டமைப்பையும் இடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம், உபி அரசுக்கு திங்களன்று நோட்டீஸ் அனுப்பியது. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தனது மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றான ‘இத்கா’வை தர்கா முபாரக் கான் ஷஹீதில் வைத்து எழுதினார், இது தர்காவை பிரபலமாக்கியது. இந்த விவகாரத்தில் நீதிபதி நவின் சின்ஹா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரபிரதேச மாநிலத்திற்கு நோட்டீஸ் […]
டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வரும் வக்கீலின் அலுவலகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாசிச பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் பலர் உயிர் இழந்தனர், முஸ்லிம்கள் வீடுகள் சூறையாடப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டனர். பாதிக்கபட்டவர்கள் மீதே டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று பலரும் எடுத்துக்காட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் மெஹ்மூத் பிராச்சா வழக்கறிஞராக இருந்து வருகிறார். மெஹ்மூதின் சட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் “குற்றச்சாட்டு ஆவணங்கள்” மற்றும் “அவுட் பாக்ஸின் மெட்டாடேட்டா” ஆகியவற்றைத் தேடுவதற்காக […]
“அப்பட்டமாக பொய் சொன்ன அமித் ஷா” – ஆர்.டி.ஐ மூலம் அம்பலபடுத்திய ஆர்வலர், ஆவேசம்!
கடந்த அக்டோபரில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அமித் ஷா “மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன” என்று கூறினார். இதை சி.என்.என் நியூஸ் 18 அல்லது இன்னபிற கோதி மீடியாக்களோ ஒரு பொருட்டாக எடுத்த கொள்ள வில்லை, பேட்டி கண்ட நபரும் இதை எப்படி சொலிகிறீர்கள், இதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கவில்லை. இந்நிலையில் பிரபல ஆர்.டி.ஐ ஆர்வலர் திரு.சாகேத் […]