பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]
கர்நாடகா: பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருந்த இமாம் மீது கொலைவெறி தாக்குதல் !
செவ்வாய்க்கிழமை இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள கர்நாடகாவின் ஃபாரங்கிப்பேட்டே எனும் நகரில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இமாம் குந்தாபூரில் வசிக்கும் முஷ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் பள்ளிவாசலுக்குள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் முஸ்தாக் மீது மூன்று பேர் அடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அருகிலுள்ள […]
உபி: அம்பேத்கார் சிலை உடைப்பு; போலீசார் வழக்கு பதிவு !
உபி: உபியில் உள்ள கிராமம் ஒன்றில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்ட உள்ளூர் தலித் மக்கள், செவ்வாய்க்கிழமை (30-3-21) போராட்டத்தில் ஈடுபட்டனர். குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கார் சிலை திங்கள்கிழமை அதிகாலையில் சில “சமூக விரோத சக்திகளால்” சேதம் செய்யப்பட்டதாக பில்தாரா சாலையில் உள்ள சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), சர்வேஷ் யாதவ் தெரிவித்தார். எஸ்.டி.எம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர், விரைவில் ஒரு புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். […]
தண்ணீரை தொடாமலேயே சிந்தனையின் மூலமே நீரின் மூலக்கூறுகளில் (molecules) மாறுதல்கள் செய்ய முடியும் – ஜக்கி வாசுதேவ் !
தண்ணீரை தொடாமலேயே பார்வையால் பார்த்தோ அல்லது சிந்தனையின் மூலமே கூட நீரின் மூலக்கூறுகளில் (molecules) மாறுதல்கள் செய்ய முடியும் என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அப்படித்தான் கோயில்களில் வழங்கும் தீர்த்தத்தில் அந்த மூர்த்தியின் சக்தி உட்புகுந்து, நம்மைப் பாதுகாக்கிறது என்கிறார். கிரகணம் நிகழும் பொழுது உணவு உட்கொண்டால் அது வயிற்றைக் கெடுக்கும் என்கிறார். அதற்கு ஆதாரமாக ருத்ராக்ஷத்தை வைத்து ஒரு ‘பரிசோதனை’ வேறு நடத்தி ‘நிரூபிக்கிறார்’. ‘தண்ணீர் என்பது ஒரு திரவக் கணினி,’ என்கிறார். Water is […]
உபி: வீட்டின் முன்னே ஹோலி கொண்டாட அனுமதி மறுத்த 60 வயது முதியவர் அடித்து கொலை !
உபி: மெவதி டோலா பகுதியில், தங்கள் வீட்டிற்கு முன் ஹோலி கொண்டாட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடி கொண்டே ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கூட்டம் , அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கட்டைகள் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு […]
கண்ணூர்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் வாகனம் மீது பாஜகவினர் தாக்குதல்; போலீசார் வழக்கு பதிவு !
கண்ணூர்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாகனம் மீது பாஜகவினர் தாக்கியதாக பிலதாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலையாள ஊடகமான மாத்ரபூமி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் : இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை பயன்னூர் அருகே உள்ள எடாட் […]
பாஜக இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் மிரட்டல் !
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து பிளாக் மெயில் செய்ததாக ஜபல்பூரைச் சேர்ந்த பாஜகவின் யுவ மோர்ச்சா மண்டல தலைவர் (மண்டல் ஆத்யகாஷ்) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவருடன் பெண்கள் காவல் நிலையத்தை அணுகி ஸ்ரீவஸ்தவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கற்பழிப்பு: குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு […]
இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!
புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த […]
ஒரு சிறுவனாக நரேந்திர மோடி முதலைகள் நிறைந்த ஏரியில் தினம் நீந்தி வந்தார் – மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பு..
நரேந்திர மோடி 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தபோது, முதலைகள் அதிகம் உள்ள குஜராத் ஏரி ஒன்றில் நீந்திக் கொண்டிருந்த சமயம் , முதலையால் தாக்கப்பட்டார், அதனால் அவரது காலில் ஒன்பது தையல்கள் போட வேண்டியதாகிவிட்டது என்கிறது பத்திரிகையாளர் சுதேஷ் கே.வர்மா எழுதிய“நரேந்திர மோடி: தி கேம் சேஞ்சர்” (விட்டாஸ்டா), மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம். ஒரு சிறுவனாக, காலையில் தேநீர் கடையில் வேலை செய்தபின், மோடி தினமும் வாட்நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஷர்மிஷ்டா […]
டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !
மூன்று குழந்தைகளை கொண்ட 50 வயதான முஸ்லீம் பெண்மணி தபஸ்ஸும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டில்லி கலவர வழக்கில் ஷஹாபுதீன் என்ற அவரது மகன் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து விட்டது. கணவர் மற்றும் மூத்த மகன் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர், பிறகு அவரது மகன் ஷாஹாபுதீன் மட்டுமே அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்தார். இவரை தான் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது தபஸ்ஸும் தனது குழந்தைகளுடன் வடகிழக்கு […]
மோடி சர்வாதிகார போக்கை மேற்கொள்கிறார்; மாநில உரிமைகளில் தலையிடுகிறது மத்திய அரசு – கர்நாடக பாஜக அமைச்சர் குற்றச்சாட்டு !
கர்நாடக பாஜக அமைச்சர் ஒருவர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் “சர்வாதிகார” தன்மைக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.மோடியின் சர்வாதிகார தன்மையே பிராந்தியவாத கிளர்ச்சிகளுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். பி.எஸ். யெடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசாங்கத்தின் சிறு நீர்ப்பாசன அமைச்சர் ஜே.சி.மதுசாமி. இவர் மோடி அரசுக்கும் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே உள்ள ஒப்பமைவை சுட்டி காட்டி பேசினார். மைசூருவில் ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பில் அகில […]
உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !
உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கி கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தபட்டுள்ளது. நாட்டையே உலுக்கி இருக்க வேண்டிய இந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. நீதிபதிக்கே இந்த நிலை: கடந்த மார்ச் 25 அன்று, உன்னாவோவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சட்டம்), பிரஹ்லாத் டோண்டன் […]
பாஜக வின் தமிழக தேர்தல் அறிக்கையை தெலுங்கானா விவசாயிகள் எரித்து போராட்டம் !
தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கவுள்ள தமிழ் நாட்டில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், தெலுங்கானாவின் மஞ்சள் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆர்மூர் நகரில், மஞ்சள் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் நகல்களை அவர்கள் எரித்தனர்.பாஜக வின் நிஜாமாபாத் மக்களவை […]
பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட போது எந்த சிறையில் மோடி வைக்கப்பட்டார்? எப்போது கைது செய்யப்பட்டார்? என ஆர்.டி.ஐ தாக்கல் !
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். தலைநகர் தாக்காவில் பேசிய மோடி தான் பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதாகவும், அதற்காக சிறை சென்றதாகவும் கூறினார். “பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம் எனது வாழ்க்கை பயணத்திலும் ஒரு முக்கியமான தருணமாகும் … நானும் எனது சகாக்களும் இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் … அப்போது நான் எனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி நான் சிறையிலும் அடைக்கப்படும் வாய்ப்பை அப்போது பெற்றேன்” […]
பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பு !
உபி: சட்ட கல்லூரி மாணவி தாக்கல் செய்த கற்பழிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில், முன்னாள் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தை மார்ச் 26 தேதி, வெள்ளிக்கிழமையன்று குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்த் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்த அவர்,கடந்த 2019 ஆகஸ்டில் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக […]