Just In Political Figures

“வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப மோடி ஆட்சி” – நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் !

2020- 2021-க்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது திருக்குறல் ஒன்றை வாசித்து பிரதமர் மோடி ஒரு மாமன்னர் என்ற கருத்துப்பட நிர்மலா சீதாராமன் மோடி புகழ்ப் பாடியமைக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழக எம்பிக்கள் மத்தியிலிருந்து கடும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது கருத்தை கண்டிக்கும் விதமாக பல எம்.பிக்கள் பேச்சை குறுக்கிடும் விதத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

பட்ஜட் உரை வாசிப்பின் போது ஆத்திச்சூடி, திருக்குறள் மேற்கோள்காட்டி சில விஷயங்களை கூறியுள்ளார் நிர்மலா.

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து”

என்ற திருக்குறளை தமிழில் வாசித்து விட்டு அதன் விளக்கத்தை ஆங்கிலத்தில் வாசித்தார். அதாவது நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று வள்ளுவர் கூறுகிறார்.

வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப மோடி ஆட்சி:

திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார், அவரின் ஆட்சியின் கீழ் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என புகழாரம் சூட்டினார் நிர்மலா. இதற்கு தமிழக எம்பிக்கள் உட்பட பல எம்.பிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நெட்டிசன்கள் கிண்டல்:

பிறகு பேச்சை தொடர்ந்த நிர்மலா ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது, குடிமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், செல்வம் வழங்குநர்கள் மதிக்கப்படுகிறார்கள், மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என நிர்மலா கூறினார். இதற்கு எதிர் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு ஒரு புறம் இருந்தாலும், நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

அதே போல சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிர்மலா குறிப்பிட்டமைக்கு தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.