புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன்’ என்ற கருத்தை பாஜகவின் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எதிர்மறையான வடிவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார் அமைச்சர்.
டெல்லியில் வர்த்தக வாரியத்துடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு கோயல், “தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் தற்போதைய பொருளாதாரம் குறித்தான கணிதங்களுக்குள் எல்லாம் செல்ல வேண்டாம் (!) ” என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தனது அறிவுபூர்வமான அறிவுரையை தொடர்ந்த அமைச்சர் “5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் உங்கள் பார்வை இருந்தால் (இதனை சொன்னதே மோடி தான்), நாடு 12 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர வேண்டும், ஆனால் இன்றைய வளர்ச்சி விகிதமோ 6% தான்(!) .எனவே இந்த கணிதங்களுக்குள் எல்லாம் செல்ல வேண்டாம். ஏனெனில் இந்த கணிதங்கள் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஒருபோதும் உதவவில்லை … ” என்று கூறினார்.
இதே போல நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), மோட்டார் வாகனத்துறை வீழ்ச்சி பற்றி பேசுகையில், கார்கள் வாங்குவதை தவிர்த்து ஓலா, ஊபர் ஆகியவற்றில் பயணிப்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதால் வாகன உற்பத்தித்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக (!) தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் அமைச்சர் நிர்மலாவை கலாய்த்து தள்ளினர். டிவிட்டரில் #BoycottMillennials என்ற கேலியான ஹேஸ்டேக் டாப் ட்ரெண்டிங் லிஸ்டில் சில மணி நேரம் முதலிடத்தை பிடித்து இருந்தது என்பது குறிப்பிட தக்கது.
தற்போது ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) பற்றி கூறிய கருத்துகளை மீண்டும் குறிப்பிட்டு கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் நியூடன், ஐன்ஸ்டன் இல்லை என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்க்க ஆர்மபித்தனர். இது தற்போது இந்திய ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துவிட்டது.
தொடர்ந்து இவ்வாறான அறிவு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பாஜக மத்திய அமைச்சர்களை கண்டு மக்கள் மெய்சிலிர்த்து வருகின்றனர்.