மோடி அரசால் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டு காவல் சிறை இன்றுடன் ரத்து செய்யப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒமர் அப்துல்லா ஸ்ரீநகரின் ஹரி நிவாஸில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக அவரது தந்தை ஃபாரூக் அப்துல்லாவும் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் மெஹபூபா முப்தி தொடர்ந்து வீடு சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு.
தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், காஷ்மீரில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் மோடி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது