திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார்.
‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு பிரச்சினை, ’’ என்றார். ‘
இரண்டாவது சிறப்பு என்னவென்றால், மாநிலத்தில் 55% இந்துக்கள் மற்றும் 45 சதவீத சிறுபான்மையினர் உள்ளனர். எனவே, இந்த வேறுபாடு எல்லா கணக்கீடுகளிலும் இருக்கும். அதனால்தான் கேரளாவை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாது. இங்குள்ள நிலைமை வேறுபட்டது, ஆனால் நாங்கள் மெதுவாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.