“ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” என்ற பிரதமர் மோடியின் கருத்து தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் கூற்றுக்களுடன் பொருந்துவதாக இல்லை.
பயங்கரவாத தொடர்பான வழக்குகளில் ‘மோஸ்ட் வாண்டட்’ என்பதற்கான ஒரு பகுதியை என்ஐஏ வலைத்தளம் கொண்டுள்ளது, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முஸ்லீம் பெயர் தாங்கிகளை ஒப்பிடும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட கூடிய பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் தான் நீண்டதாக உள்ளது தெளிவாகிறது.மாவோயிஸ்ட்கள் பெரும்பாலும் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.இது பிரதமரின் கருத்துக்கு முரணாக உள்ளது.
மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பின் தலைவர் லக்ஷ்மன் ராவ் (கணபதி) பற்றிய செய்திகளை தெரிவிப்பவர்களுக்கு தான் அதிக பட்ச வெகுமதியான ருபாய் 15 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஒரு முஸ்லிம் அல்ல.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு :
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு மற்றும் அஜ்மீரில் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் “பயங்கரவாத கும்பலின்” உறுப்பினர்களாக தேடப்படும் ராம்சந்திர கல்சங்ரா மற்றும் சந்தீப் டாங்கே என்பார்கள் தான் இரண்டாவது மிக உயர்ந்த தர்ஜாவில் உள்ளவர்கள்.
இவர்களை பிடிக்க உதவினால் ரூ .10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அசிமானந்த் மற்றும் மூன்று பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.இது குறித்து ஆதாரங்கள் இருந்தும் எப்படி இவர் விடுவிக்கப்பட்டார் என்ற தொனியில் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் என்ற மற்றொரு பயங்கரவாதி “most wanted ” லிஸ்டில் உள்ளவர். இவர் தலைமறைவாக உள்ளார் என்று NIA குறிப்பிட்டுள்ளது.
2009 ல் கோவாவின் மார்கானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் என்ஐஏ வால் தேடப்பட்டுவரும் மற்றொரு நபரும் இந்து மதத்தை சேர்ந்த சோம்ராஜ் ஜெய் பிரகாஷ் (என்கின்ற. அண்ணா) என்பராவார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு பயங்கரவாதி ருத்ரா பாட்டீலும் தலைமறைவாக உள்ளார்.
இருவரின் பெயரிலும் இன்டர்போல் (சர்வதேச குற்றஒழிப்பு காவல் துறைக்குழு) ரெட் கார்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மோதிஹாரியில் ரயில் தடங்களில் பிரஷர் குக்கர் வெடிகுண்டு வைத்த வழக்கில் பிரஜ் கிஷோர் கிரி என்பவர் பெயரிடப்பட்டுள்ளார், மேலும் இந்த வழக்கு தொடர்பாக மோதி லால் பாஸ்வான், உமாஷங்கர் படேல் மற்றும் முகேஷ் யாதவ் ஆகிய 3 பேரை மோதிஹாரி போலீசார் கைது செய்தனர்.
தீவிரவாதி என்றாலே முஸ்லிம் தான் என்ற பிம்பம்!
இவை அனைத்தும் பழைய செய்திகளாக இருந்த போதிலும் வெகுஜன மக்களுக்கு புதியசெய்திகளாக தோன்ற கூடும். இதற்கு காரணம் தீவிரவாதம் என்றாலே அதில் முஸ்லிம்கள் தான் ஈடுபடுவார்கள் என்ற மாய தோற்றம் ஏற்படுத்தி அதில் வெற்றியும் அடைந்து வரும் மீடியா மற்றும் அரசியல் இலாபத்திற்காக மக்கள் மத்தியில் பிரிவிணையை விதைக்கும் அரசியல்வாதிகள் தான் என்றால் அது மிகையல்ல.முஸ்லிம்களில் மட்டுமே தீவிரவாதிகள் இருப்பது போன்று வளர்க்கப்படும் பிம்பம் இதன் மூலம் உடைக்கப்பட்டுள்ளது.
Main source for the article: indiatoday