அவுரங்காபாத்: மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் திரு. துஷார் காந்தி. இவர் “காவி (பாஜக) கட்சி உதட்டளவில் காந்தியை வைத்து கொண்டு மனதளவில் கோட்ஸேவை கொண்டு செயல்படுவதாக” குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு புதிய இந்தியா உருவாகி கொண்டு இருப்பதால் , ஒரு புதிய ‘தேச தந்தையும்’ உருவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட தேசத்திற்கு காந்திஜி ஒரு போதும் தேச தந்தையாக மாட்டார்” என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள காந்திஜியின் அஸ்தி திருடப்பட்டிருப்பது குறித்து ‘இது புனிதத்தன்மையை மதிக்காமல் செய்யப்பட்ட ஒரு அவச்செயல்’ என்றும் இந்த திருட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் மத்திய அரசாங்கங்கள் மெளனம் காப்பது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
Photo Credit: CC BY 3.0-Biswarup Ganguly