ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடந்த 2020 நவம்பரிலிருந்து ஒரே ஒரு உறுப்பினருடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனகடந்த மாத தொடக்கத்தில் தில்லி உயர்நீதிமன்றம் கூறிய பின்னரும் கூட, ஆறு காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து இது வரையிலும் கூட தெளிவு இல்லை.
1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் போது, புகார்களை கையாள்வது ஆகியவே இந்த ஆணையத்தின் பிரதான பணியாகும்.
கமிஷனின் தனி உறுப்பினரான அதிஃப் ரஷீத், காலியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது எந்த விதத்திலும் ஆணையத்தின் பணிகளை பாதிப்பதில்லை (!) என்கிறார்.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது , ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தன் பங்குக்கு தெரிவித்துள்ளார்.
கமிஷனைப் பொருத்தவரை, அதன் பணி எந்த வகையிலும் முடங்கவில்லை. ஊழியர்கள் துணைத் தலைவருடன் இணைந்து பணியாற்றுகின்றனர். தலைவரும் விரைவில் நியமிக்கப்படுவார் என நக்வி மேலும் கூறினார்.
“சிறுபான்மை ஆணையம் மற்றும் இதுபோன்ற பிற கமிஷன்கள்’ உள்ள தலைவர்கள் அரை நீதித்துறை அதிகாரிகள்’ போன்றவர்கள் , தலைவர் என ஒருவர் இருந்தால் மட்டுமே பயன்படும். இல்லையெனில் நீதிபதி இல்லாத நீதிமன்றம் போன்றதாகிவிடும். தகுதிவாய்ந்த ஊழியர்கள், துணைத் தலைவர் இருந்தாலும் கூட, வழக்குகளை விசாரிக்க போதுமான நபர்கள் இல்லையென்றால் வழக்குகள் பாதிக்கப்படும் ”என்று 2011 முதல் 2014 வரை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய வஜாஹத் ஹபீபுல்லா கூறுகிறார்.
ஒரு முழு ஆணையம் இருந்தால், அவர்கள் அரசாங்கக் கொள்கைகளை மிகவும் திறம்பட மதிப்பாய்வு செய்து மாநிலங்களுக்கு நேரே சென்று அதிக அளவிலான விசாரணைகளை நடத்த முடியும். ஒரே உறுப்பினர் மட்டும் கொண்டு எவ்வளவு வேலை செய்ய முடியும்? ” என பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் கமிஷன் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.