International News Muslims Rohingya

ரோஹிங்கியா இன படுகொலை – காம்பியா நாடு சர்வதேச நீந்திமன்றத்தில் புகார்!

காம்பியா…..காம்பியா…..

மியான்மரின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி, காம்பியா நாட்டு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதி ஆணையமான “International Court of Justice” ல் புகாரளித்திருந்தது. அதற்கான ஹியரிங் கடந்த மூன்று நாட்களாக டென்மார்க்கின் ,ஹாக் நகரத்தில் அமைந்துள்ள நீதி ஆணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பட்ட அவதிகளையும் இன்னல்களையும் விடியோ ஆதாரங்களாகவும் , ஐநா துருப்புகள் அளித்த சாட்சியங்களை சமர்ப்பித்தும் காம்பியா நாட்டு நீதித்துறை அமைச்சர் அபுபக்ர் தம்பாதூ , பர்மிய நாட்டு அதிபர் ஆங்சான் சூகி மீது குற்றம் சுமத்தினார்.

பெண்களை கற்பழித்தது, மக்களை கூட்டமாக வீட்டினுள் வைத்து உயிருடன் தீயிட்டு கொளுத்தியது, வீடுகளையும் கிராமங்களையும், அவர்களது தோட்டங்களையும் தொழில் ஸ்தாபனங்களையும் தீக்கிரையாக்கியது மற்றும் ஆறு வயதிற்கும் குறைவான சுமார் 100 குழந்தைகளை தரையில் வீசி கொலை செய்த பர்மிய இராணுவத்தினரை உலக அரங்கில் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வேண்டுதல் வைக்கப்பட்டது.

Rohingya Refugee

ஐநா அனுப்பிய துருப்புகளில் ஒருவரான லோவென்ஸ்டீன் என்பவர் அளித்த சாட்சியத்தின்படி, நாங்கள் பாதிக்கப்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் வாழ் பகுதிகளில் ஆய்வில் ஈடுப்படிருந்தோம், அங்கே இளைஞர்கள் ஒரு 25ற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டு தரையில் கிடந்தனர். வீட்டின் ஒதுக்குப்புறம் ஒன்றில் பர்மிய ராணுவ வீரன் ஒருவன் பெண் ஒருத்திய பாலியல் வல்லுறுவில் ஈடுபடுத்திவிட்டு அவளது தலையில் அடித்தான், அவள் பிறந்து 28 நாட்களே ஆன அவளது குழந்தையை காப்பாற்ற நகன்றாள், அந்த வீரன் அந்த குழந்தையை தரையில் வீசி கொன்றான், இறப்பதற்கு முன் அந்த பெண் கொடுத்த வாக்குமூலமும் எங்களிடம் வீடியோவாக உள்ளது என்றார்.

ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்காக இந்த நீதி ஆணையத்தில் வழக்குறைஞராக ஆஜரான பிலிப் சான்டர்ஸ் கூறியதாவது , கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பர்மிய பௌத்த இனவாத கொடூர்ர்களால் சொல்லொனா சித்ரவதைகளுக்கு ஆளாகி இருக்கும் இவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கப்பெறாவிடில் வேறு எங்கு கிடைக்கும் . இனவாதம் இத்தனை கொடூரமானது என்பதை ரோஹிங்ய முஸ்லிம்களை உயிருடன் வைத்து இவர்கள் கொளுத்துவதில் இருந்தே அறியமுடிகிறது.

இதுவரை 7,30,000 பேர் அகதிகளாக பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ வழியின்றி அநாதையாக்கப்பட்டுள்ளனர். அண்டை நாடுகளான மலேசியா,இந்தியா,தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் அவர்களை ஏற்பதாக இல்லை. மற்ற முஸ்லிம் நாடுகளும் ஆதரவு தருவதாக இல்லை. இந்த நிலைக்கு பூர்வகுடி மக்களான அவர்களை ஆளாக்கிய அதிபர் ஆங்சான் சூகி , அமைதிக்கான நோபல் பரிசினை ஏற்பதற்கு தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என்றார்.

Rohingya

மூன்று நாட்கள் நடந்த இந்த புகார் குறித்த விசாரணைகளுக்கு இன்று ஆஜரான அதிபர் ஆன்சாங் சூகி, பர்மா ஒரு பௌத்த நாடு அது அமைதிக்கு பேர் போன நாடு. ராணுவ நடவடிக்கைகளின் போது இப்படி சில அசம்பாவிதங்கள் நடந்தேறியிருக்கலாம் ஆனால் இவை திட்டமிடப்பட்டது என கூறு மதம் மீது பயங்கரவாதச்சாயம் பூசக்கூடாது. தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர் யாரோ அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க ஆவண செய்யப்படும் என்றார். ஆன்சாங் சூகிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் பர்மாவின் மாண்டலேவில் கூடி கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் தங்களுக்காக நீதி பெற்றத்துதர தாமாக முன்வந்து தங்களது ஆதங்கங்களை பதிவு செய்து சர்வதேச நீதி ஆணையம் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்து காம்பியா நாட்டு உதவிக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரோஹிங்ய முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கூடி பர்மிய-பங்களாதேஷ் எல்லையில் கூட “காம்பியா காம்பியா” என்க்கூறி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆக்கம் : நஸ்ரத்