Hindutva Islamophobia States News

இந்து மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை, அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்- போலீசில் புகார்.

அஷ்ரப் அலி என்பவர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் என்ற பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ளார்.குடிபெயர்ந்த முதல் இரண்டு மூன்று மாதங்கள் நிம்மதியாக இருந்த இவர் அதன் பின்னர் அப்போதிலிருந்து இன்று வரை 4 வருடங்களாக கடுமையான மன உளைச்சலுக்கும் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.இதற்குக் காரணம் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிஷன் லால் என்பவரும் அவரது மகனும் தான் என்று ஆஷ்ரப் அலி கூறுகின்றார்.

கிஷன் லால் மற்றும் அவரது மகன் அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை   இந்து மதத்திற்கு மதம் மாறுமாறு கட்டாயப் படுத்தி வந்துள்ளனர் அவர் இதை ஏற்காத காரணத்தினால் பல்வேறு கட்டங்களில் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.இதை அவர் வீடியோவில் கூறுவதை காணலாம்.

வீடியோவை காண

இவரது மனைவி 8 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த  சமயத்தில்   கிஷன் லால் அவரது மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கியதில் அவரது ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  வீட்டின் முன்னே வெளியேற முடியாத அளவிற்கு வண்டியை நிறுத்துவது, அஷ்ரப் அலி வீட்டிற்கு யாரேனும் வந்தால் அவர்களை தடுப்பது,விரட்டுவது , மேலும் சின்னஞ்சிறு குழந்தைகள் என்றும் பாராமல்  குழந்தைகளை மிரட்டுவது என்று மூர்க்கத்தனமாக நடந்து வருகின்றார் கிஷன் லால். இவர் ஒரு டிரைவராக வேலை பார்க்கிறார்.

WIfe of Ashraf Ali-Attacked
போலீசில் பல புகார்கள் அளித்தும் பயனில்லை :

கிஷன் லால்  குறித்து பல்வேறு கட்டங்களில்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை மனைவியை தாக்கிய வழக்கில் மட்டும் ஒரு முறை கைது செய்யப்பட்ட. ஆனால் நான்கு நாட்களில் பெயிலில் வெளியேறிவிட்டார். வெளியேறி 15 நாட்களுக்குள் ஒரு பெண்ணை செட்டப் செய்து அஷ்ரப் மீது கற்பழிப்பு புகார் அளிக்க செய்துள்ளார், இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஷ்ரப் அலி ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவருக்கு 7 வயது, 4 வயது மற்றும் 1 வயது என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

பொய் வழக்கில் ஜெயிலில் இருந்த சமயத்தில் தன்னுடைய குடும்பத்தாரின் பாதுகாப்பை நாடி வீட்டில் சிசிடிவி பொருத்தி இருந்தார்.ஆனால் அந்த சிசிடிவி யையும் கிஷன் லால் என்பவரும் அவரது மகனும் உடைத்தெறிந்து விட்டதாக அஷ்ரப் கூறுகிறார்.

ஜெயிலில் இருந்து வெளியேறிய நாள் முதல் வேலையும் சரியாக கிடைக்காமல் எங்கு சென்றாலும் நீ ஜெயிலுக்கு எதற்காக சென்று வந்தாய் என்று கேட்டு கேலி  செய்யப்படுவதால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த வீடியோவில் அழுது முறையுடன் அஸ்ரப் அலி மூன்று குழந்தைகள் மற்றும் மனைவிக்கு உணவு வழங்குவது கூட கடினமாகிவிட்டது என்று கூறுகிறார்.

தொடர் சித்திரவதைகளை அனுபவித்து வரும் அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த முறையாவது சரியான வழக்கு பதிவு செய்யப்பட்டு  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உயிருக்கு பாதுகாப்பு கோரியும் பாதுகாப்பு டில்லி கமிஷனர் ஆபிஸ்  இன்று சென்றனர். அங்கு எடுக்கப்பட்டதுதான் மேலே பகிரப்பட்டுள்ள வீடியோ.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்தாலும் டெல்லி போலீஸ் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.