கொரோனா வைரஸ் பரப்ப திட்டமிட்டதாக பொய்யாக கூறி, டெல்லியின் பவானா பகுதியில் 22 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது பாசிச பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்த மெஹபூப் அலியை வழிமறித்து பாசிச வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். ‘நான் எந்த வைரஸும் பறப்பவரவில்லை என கால்களில் ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கூறியும்’ கொடூரமாக பாசிஸ்டுகள் அவரை தாக்கும் காணொளி வைரல் ஆனது.
ஆரம்பத்தில் தாக்குதலுக்கு ஆளான மெஹபூப் அலி என்று அந்த இளைஞர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது, எனினும் பின்னர் இதை டெல்லி போலீசார் மறுத்தனர்.
“கொரோனா இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் டெல்லியின் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நன்றாக இருக்கிறார். தனிமை மையத்தில் வைக்கப்படுள்ளார். சமீபத்திய தகவல்களின்படி, இன்றுவரை அவரிடம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைரஸைப் பரப்புவதற்காக அவரும் மற்ற சிலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் எச்சிலை பரப்ப திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாசிஸ்டுகளின் தொடர் பொய் பிரச்சாரமும் வட இந்திய மோடியாக்களின் அயராத ஒத்துழைப்புமே என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
நவீன், பிரசாந்த் மற்றும் ப்ரோமோட் ஆகிய மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரிவு 341/323/506/34 இன் கீழ் பவனா காவல் நிலையத்தில் ஐபிசி பதிவு செய்யப்பட்டுள்ளது.