பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கின்றன . அந்த வரிசையில் தற்போது நடந்துள்ள சம்பவம் கொடூரமானதாக உள்ளது
செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் இமாம் முஹமது இர்ஃபான் (38) மற்றும் அவரது மனைவி யாஸ்மின் (25) ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.இமாம் சரியாக கண் தெரியாதவராக இருந்துள்ளார் என்று ஊர் வாசிகள் தெரிவித்தனர்.
கிராமவாசிகளிடமிருந்து தகவல் கிடைத்ததும், எஃப்.எஸ்.எல்(FSL) குழுவுடன் காவல்துறையினர் கிராமத்தை சென்று அடைந்ததாக டி.எஸ்.பி ஜிதேந்தர் குமார் தெரிவித்தார். கிராமவாசிகளின் வாக்குமூலங்களை பதிவுசெய்து, சம்பவம் நடைபெற்ற இடத்தின் புகைப்படங்களை எடுத்த பிறகு , போலீசார் சடலங்களை சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மணிக் மஜ்ரி கிராமத்தில் சனிக்கிழமை இரவு 11 மணி யிலிருந்து அதிகாலை 4:30 மணி முன் உண்டான நேரத்தில் தான் இந்த கொலை நடந்துள்ளது. தம்பதியினரின் வீட்டில் கொள்ளை நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை எனவும் நில தகராறு போன்ற பிரச்சனைகள் எதுவும் கூட இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
ஃபஜர் தொழுகை பாங்கு சப்தம் கேட்கப்படாததால் ஏற்பட்ட சந்தேகம்
இமாம் இர்ஃபான் 4 ஆண்டுகளாக இமாமாக பணிபுரிந்து வந்தார், அதே பள்ளயில் வைத்து ஒரு வருடத்திற்கு முன்பு யாஸ்மின் என்ற மீனாவை மணந்து கொண்டார்.
கிராமவாசிகளில் ஒருவரான குர்ஷீத் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் , இமாம் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு தொழுகைக்கான அழைப்பை (அஸான்) விடுப்பது வழக்கம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை எந்த அஸானும் கேட்கப்படவில்லை, இது சந்தேகத்தை எழுப்பியது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலை வேலை தொழுகைக்கு வந்த மக்கள் 5 மணியளவில் தம்பதியினரின் சடலங்களாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ந்து போயினர். ‘கூர்மையான பொருளால்’ இந்த கொலை செய்யப்பட்ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் தம்பதியினர் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார் . மேலும் அவர் கூறுகையில் “இந்த தம்பதியினர் கிராமத்தில் யாருடனும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதில்லை.. கடந்த சனிக்கிழமை மாலை, கிராமவாசிகளின் 2 தரப்பினர் நிலத் தகராறு தொடர்பாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன,அப்போது இமாம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார். அதில் ஒரு தரப்பு அவரை அச்சுறுத்தியது. அவர்கள் தான் தம்பதியரை கொலை செய்திருக்க கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ” என்று கூறினார்
தற்போது போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்’ என்ற சமூக ஆர்வலர் அமைப்பு தெரிவித்தது .கிராமவாசிகளும் அதையே கூறியுள்ளனர். எனினும், இதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
நாங்கள் தொடர்ந்து இயங்கிட உங்களால் ஆன பொருளாதார உதவியை செய்திடுங்கள்