பிஹார் மாநிலம் ஹாஜ்பூர் முபாசில் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஜமால்(30), திங்கள்கிழமை (11-11-19) மாலை 18 மாடுகளுடன் மேற்குவங்கத்தை நோக்கி தனது சகோதரர் கமல் மற்றும் வேறொரு நபருடன் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, சாகர் யாதவ் மற்றும் அவரது மூன்று மகன்கள் லாபா பாலத்தை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கக் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.இதனை அடுத்து லத்திகள், மற்றும் காம்புகளை கொண்டு கடுமையாக அடித்து, கால்நடைகளை இழுத்து சென்று விட்டனர்.
முஹம்மத் ஜமாலின் சகோதரர் கமலும் அவருடன் இருந்த மற்றொருவரும் எப்படியோ அங்கிருந்து தப்பினர், ஆனால் சாகர் யாதவும் அவரது மகன்களும் ஜமாலை அடித்து கொலை செய்தனர். ஜமாலிடமிருந்து கொண்டு செல்லப்பட்ட 18 கால்நடைகளில் 13 மீட்கப்பட்டுள்ளன என்றும், தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெவித்துள்ளனர்.
ஜமாலின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் நெடுஞ்சாலை 31 கதிஹார்-கெடாபரி சாலையில் தீப்பந்தங்களுடன் உள்ளூர்வாசிகள் சுமார் மூன்று மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.