கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலித் அன்சாரியை (15 வயது) “துதாறி” பாலத்தருகே 4 நபர்கள் முகங்களை மூடிய நிலையில் கடத்தி சென்று அவர் மீது கிரோசின் ஊற்றி கொளுத்தி உள்ளனர்.
இந்த காட்டுமிராண்டிதனமான சம்பவத்தில் மரணித்த அந்த சிறுவன் கூறியவைகள்:
4 பேரில் இருவர் என்னுடைய கைகளை பிடித்துக் கொண்டனர். அனைவருடைய முகங்களும் துணிகளால் மறைத்து வைத்திருந்தனர்.அதில் ஒருவன் “சுனில் இவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்றவை, இதனால் இவன் தானாகவே இறந்துவிடுவான்” என்று கூறியதாக மரண வாக்குமூலமாக அந்த சிறுவன் வாரணாசியில் உள்ள கபீர் சவுரஹா மருத்துவமனையில் இருந்த நிலையில் கூறியுள்ளார்.
உங்களை அவர்கள் ஏன் தாக்கினார்கள்? என்று கேட்டபோது, என்னை அவர்கள் “ஜெய் ஸ்ரீராம் என்று கூற வற்புறுத்தினர் நான் கூறவில்லை, அல்லாஹ்வை திட்டுமாரு கூறினர். அதையும் நான் கேட்கவில்லை. இதனால் கோபமுற்று என்னை இவ்வாறு செய்து விட்டனர்” என்று தன் மகன் கூறியதாக அன்சாரியின் தந்தை தெரிவித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது .
போலீஸ் அப்பட்ட மறுப்பு:
உபி சன்தவ்லி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தோஷ் குமார் சிங் கூறுகையில் இது முற்றிலுமாக பொய். இவ்வாறு எல்லாம் சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி உள்ளார். மரணித்த சிறுவன் இது குறித்து முரண்பட்ட தகவல் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் மரண வாக்குமூலமாக சிறுவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மரணித்த சிறுவன், தன் மீது தானே தீ கொளுத்தி கொண்டார் என்பது போல போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.