‘பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன்? ‘ என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
“ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு நிதி செலுத்துவோருக்கு வருமானவரி சட்டம் 80G இன் கீழ் ஏற்கனவே வரி விலக்கு அளித்துள்ள மத்திய பாஜக அரசு அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள‘இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷனுக்கு ‘ இன்னும் வரிவிலக்கு அளிக்கவில்லை.
“இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” என ரவிக்குமார் அந்த நோட்டீஸில் கேட்டு கொண்டுள்ளார்.
ராமர் கோவில் கட்டுமானத்தில் கோவில் மட்டுமே கட்டப்பட திட்டமிடப்பட்டுளளது, எனினும் புதிதாக அயோத்தியில் கட்டப்பட உள்ள பள்ளிவாசளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் விதத்தில் மருத்துவமனையும் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.