கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலத்தின் ஹஸ்ஸான் மாவட்டத்தில் உள்ள பல்வேரு பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அச்சுறுத்தும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் பெயர் குறிப்பிட்டு கடிதங்கள்:
ஹசன், அர்சிகேர், சக்லேஷ்பூர் மற்றும் பேலூரில் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு இதுபோன்ற அநாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கடிதங்களில் பெல்லாரி பகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சோமாஷேகர ரெட்டி மற்றும் விஜயநகர பாஜக எம்.எல்.ஏ ஆனந்த் சிங் ஆகியோரின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்திற்கு மாறும்படியும் அச்சுறுத்தபட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்:
அநாமதேய கடிதங்கள் அனுப்பட்டது தொடர்பாக கோபத்தை வெளிப்படுத்திய மசூதிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் காவல்துறையினரை சந்தித்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
நாட்டில் அமைதி மற்றும் செழிப்பை நாங்கள் விரும்புகிறோம் என பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் கூறினார், ஆனால் இதுபோன்ற மோசமான செயல்களைச் செய்வதன் மூலம் தேச விரோதிகள் அமைதியை சீர்குழைக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு சில உள்ளூர்வாசிகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகியுள்ளது