மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறுப்பு வன்முறை சம்பவங்களும், மாட்டின் பெயரால் மனிதர்கள் அடித்து கொலை செய்யப்படு சம்பவங்களும பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்களும் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன. நாடுமுழுவதும் பரவலாக கும்பல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் சற்று கூடுதலாகவே நடைபெற்று வருவதாக ஒரு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
“இறந்து கிடக்கும் மாட்டில் இறைச்சியை அறுத்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 3 கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறி கும்பல் வன்முறை தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.தாக்கப்பட்ட மூவரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணித்தார். தாக்குதல் சம்பவம் ஞாயிறு (22-9-19) காலை 10 மணியளவில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதில் கொல்லப்பட்டவர் மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது
கலந்தஸ் பார்லா, பிலிப் ஹோரோ மற்றும் ஃபாகு கச்சாப் ஆகிய மூவரும் மாட்டிறைச்சி அறுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது அதை கண்டு திரண்ட கிராமவாசிகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதலுக்கு ஆளான மூவரையும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் கலந்தஸ் பார்லா என்பவர் கொடூரமாக தாக்கப்பட்ட காரணத்தினால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மரணித்தார். மீதமுள்ள இரண்டு பேரும் உயிர் பிழைத்துள்ளதாக ஹோம்கர் அமோல் வேணுகாந்த் – சோட்டானக்பூர் ரேஞ்ச் டி.ஐ.ஜி -தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிலரை போலீசார் தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வந்தாலும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கும்லா மாவட்டத்தின் ஜுர்மோ கிராமத்தில் ஒரு பழங்குடி கிறிஸ்தவர் பிரகாஷ் லக்ரா இதே போன்ற ஒரு கும்பல் வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ஜார்கண்ட் விலங்கு படுகொலை தடை சட்டத்தின் கீழ் தாக்குதலுக்கு ஆளானவர் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தப்ரேஸ் அன்சாரி என்பவர் மீது திருட்டு பட்டம் சூட்டி கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு ஒரு இரவு முழுவதும் அடித்து காட்டுமிராண்டித்தனமாக மதவெறியர்களால் கொல்லப்பட்டார் என்பதை நாடு அறிந்ததே.இந்நிலையில் மற்றொரு சம்பவம் மாட்டின் பெயரால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது,எனினும் ஊடகங்கள் இவ்வாறான சம்பவங்களை மக்கள் வரை எடுத்து செல்வதில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகவும்.
குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 21 நபர்கள் கும்பல் வன்முறை சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.