Modi

‘தேசத்துரோக வழக்கில் மோடி விசாரிக்கப்பட வேண்டும்!’- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் கருத்து …

பாசிச சித்தாந்தந்தை எதிர்கொள்ளும் விதமாக திரு,கண்ணன் கோபிநாத் அவர்கள் தனது ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார். ராஜினாமா செய்தது முதல் பாசிச சித்தாந்தங்களுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் துணிச்சலான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“பிரதமர் மோடி அவர்களே, இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்ததற்காக, பிறகு இது குறித்து நாட்டு மக்களை ஏமாற்றியதற்காகவும் தேசத் துரோக வழக்கில் நீங்கள் விசாரிக்கப்பட வேண்டும், விசாரிக்கப்படுவீர்கள்.”

அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற ஒரு துரோக செயல் தண்டிக்கப்படாமல் போகாது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளையொரு நாள் தேச துரோக வழக்கில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் திரு, கண்ணன் அவர்கள்.