Modi

பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி சிறை சென்றேன் – பங்களாதேஷில் பிரதமர் மோடி பேச்சு !

கொரோனா காரணத்தால் ஒரு வருட காலத்திற்கும் மேலாக வெளிநாடு செல்லமுடியாத நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். 50 வது சுதந்திர விழாவை கொண்டாட உள்ள பங்களாதேஷ் நாட்டிற்கு மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்று அண்டை தேசத்தின் சுதந்திரத்திற்காகனது என்று மோடி கூறினார்.

டாக்காவில் உள்ள தேசிய அணிவகுப்பு மைதானத்தில் பிரதமர் மோடி பங்களாதேஷின் தேசிய தின விழாவில் தனது சக ஷேக் ஹசீனாவுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ..

பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம் எனது வாழ்க்கை பயணத்திலும் ஒரு முக்கியமான தருணமாகும் … நானும் எனது சகாக்களும் இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் … அப்போது நான் எனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி நான் சிறையிலும் அடைக்கப்படும் வாய்ப்பை அப்போது பெற்றேன்” என கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

“இந்த மாபெரும் தேசத்தின் வீரர்கள் செய்த தியாகத்தையும், பங்களாதேஷ் படையினரின் அருகில் நின்ற இந்தியர்களையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் … அவர்களின் துணிச்சலையும் தைரியத்தையும் நாங்கள் மறக்கவில்லை …. அதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்,” என பிரதமர் மோடி கூறினார்.

“இது எனது வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாகும். இந்த நிகழ்வில் பங்களாதேஷ் என்னை சேர்த்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று மோடி மேலும் கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் ஆகியோர் பங்களாதேஷ் தலைநகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.