நரேந்திர மோடி 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தபோது, முதலைகள் அதிகம் உள்ள குஜராத் ஏரி ஒன்றில் நீந்திக் கொண்டிருந்த சமயம் , முதலையால் தாக்கப்பட்டார், அதனால் அவரது காலில் ஒன்பது தையல்கள் போட வேண்டியதாகிவிட்டது என்கிறது பத்திரிகையாளர் சுதேஷ் கே.வர்மா எழுதிய“நரேந்திர மோடி: தி கேம் சேஞ்சர்” (விட்டாஸ்டா), மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம்.
ஒரு சிறுவனாக, காலையில் தேநீர் கடையில் வேலை செய்தபின், மோடி தினமும் வாட்நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஷர்மிஷ்டா ஏரியை அடைவார்.
புத்தகத்தின் படி, அவர் ஏரியின் நடுவில் உள்ள ஒரு கோவிலுக்கு நீந்தி, அதன் மேலே உள்ள கொடியைத் தொட்டு கரைக்குத் திரும்புவார். இவ்வாறு தினமும் மூன்று முறை செய்வார்.”ஒருமுறை, ஒரு முதலை மோடியின் இடது பாதத்தை அதன் வால் மூலம் தாக்கியதால் நரேந்திரா படுகாயமடைந்தார்” என்று புத்தகம் கூறுகிறது.
“முதலையின் வால் மிகவும் வலுவானது; அதன் வாலால் தாக்கப்பட்டால் ஆபத்தில் கூட முடியலாம். ஒரு வாளால் தாக்கப்படுவதற்கு இணையானது. ஏரியில் மொத்தம் 29 முதலைகள் இருந்ததாக கிராமவாசிகள் கூறுகிறார்கள்.”
“நரேந்திர அப்போது எட்டாம் வகுப்பு மாணவராக இருந்தார். கணுக்கால் அருகே இடது காலில் ஒன்பது தையல்களைப் போட வேண்டியதாயிற்று, இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக படுக்கையில் இருந்தார். முதலை வாலால் வெட்டப்பட்ட தழும்பு அவரது இடது காலில் இன்னும் உள்ளன.”
எனினும் மோடி அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ஏரிக்கு திரும்பி போக ஆரம்பித்து விட்டதாக புத்தகம் கூறுகிறது.
பிரதமர் மோடி ‘சிறுவனாக’ இருந்தபோது, ‘அச்சமற்ற முதலி லவ்வராக’இருந்தார் என்கிறது ‘பால் நரேந்திரா: நரேந்திர மோடியின் சிறுவயது கதைகள்‘, என்ற ஒரு காமிக் புத்தகம். மோடி ஒரு முறை ஒரு குட்டி முதலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அதை கண்டு அவரது தாய் வெறுத்தார். எனவே அதை மீண்டும் ஏரிக்கே கொண்டு செல்ல வேண்டியதாயிற்று என்கிறது அப்புத்தகம்.