Modi

‘மோடியிடமே குடியுரிமை சான்றிதழ் இல்லை’ – எழுப்பப்படும் வாதங்கள் ஏற்புடையதா?

பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கோரி சுபங்கர் சர்க்கார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஆர்டிஐக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. மோடி பிறப்பால் ஒரு இந்திய குடிமகன் என்பதால் அவருக்கு குடியுரிமை சான்றிதழ் இருக்கிறதா என்ற கேள்வியே எழுவதில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3 ன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன் ஆவார், எனவே அவர் பதிவு செய்யப்பட்ட குடியுரிமை சான்றிதழின் மூலம் தனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கேள்வியே எழுவதில்லை.” என ஆர்டிஐ யில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3 :

1 [3]. பிறப்பால் குடியுரிமை. –

(1) துணைப்பிரிவு (2) இல் கூறப்படுள்ளதைத் தவிர,

(அ) ​​1950 ஜனவரி 26 ஆம் தேதி அல்லது அதற்குப் பிரகிலிருந்து 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு வரை பிறந்தவர்கள்;

(ஆ) ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், ஆனால் குடியுரிமை (திருத்த) சட்டம், 2003 தொடங்குவதற்கு முன்னர் மற்றும் அவரது பெற்றோர் பிறந்த நேரத்தில் இந்தியாவின் குடிமகனாக இருக்கும் நிலையில் பிறந்தவர்கள்;

(இ) குடியுரிமை (திருத்த) சட்டம், 2003 தொடங்கிய பின் அல்லது அதற்குப் பிறகு,

(i) அவரது பெற்றோர் இருவரும் இந்தியாவின் குடிமக்கள்; அல்லது
(ii) பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவின் குடிமகன், மற்றவர் அவர் பிறந்த நேரத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர் இல்லை என்றால் அவர்கள் பிறப்பால் இந்திய குடிமகனாக உள்ளவர்.

மூத்த பத்திரிகையாளர் சீமி பாஷா தகவல் அறியும் உரிமை நகலையும் அதனுடன் தொடர்புடைய பதிலையும் ட்வீட் செய்துள்ளார்.

” குடியுரிமைச் சட்டம் 1955 இன் பிரிவு 3 ன் படி பிரதமர் நரேந்திரமோடி தனது குடியுரிமையைப் பதிவு செய்யத் தேவையில்லை என்றால், மற்றவர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் ? சுபங்கர் சர்க்கார் (632/2020-PME) தாக்கல் செய்த ஆர்டிஐ க்கு PMO இன் பதில் .. “

இது குறித்து எழுப்படும் வாதங்கள் ஏற்புடையதா?

சிலர் இந்த ஆர்டிஐ தகவலை பதிவு செய்து மோடிக்கே குடியுரிமை இல்லை பார்த்தீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர், எனினும் இது சரியான வாதமில்லை. அரைகுறையாக விளங்கி கொண்டதால் தான் இந்த கேள்வி எழுப்பபடுகிறது.

பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு அல்லது இந்தியாவில் தஞ்சம் கோருவோருக்கு, குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயமாகும், ஏனெனில் அவர்கள் அரசாங்க பதிவு மற்றும் இயற்கைமயமாக்கல் (naturalization) மூலம் இந்தியாவின் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பார்கள், இது குடியுரிமைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வருகிறது, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பல்வறு பிரிவுகளின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குடியுரிமைச் சான்றிதழைப் வைத்திருப்பார், ஏனெனில் அவர் பிறப்பால் இந்தியர் அல்ல, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பின்னர் விண்ணப்பிப்பதன் மூலம் குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றவர்.

வேறு என்ன செய்ய வேண்டும் ?

மோடி கூறிய பதிலை நம்மில் அதிகமானோரால் கூற முடியும். அதை அரசும் ஏற்று கொள்ளும். ஆனால் இதே பதிலை மோடியோ வேறு எவருமோ என்.ஆர்.சி க்கு பிறகு கூற முடியாது என்ற நிலை உண்டாகும்.

எனவே என்ஆர்சி நாடு முழுவதும் நடத்தவேண்டும் என சொல்லும் பாஜக கட்சியை சேர்ந்த மோடி, அமித் ஷா போன்றோரின் பிறப்பு சான்றிதழையோ அல்லது அவர்களது பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்களையோ அல்லது இவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் வேறு ஆவணங்களை கோரியோ ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றால் தான் இவர்களை முழுமையாக அம்பலப்படுத்த முடியும். கீழுள்ள ஆர்ட்டிகளில் உள்ளது போன்று கேட்க வேண்டும் ..

இப்படியும் கேட்கலாம்.. இதற்கு இது வரை பதில் இல்லை