பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை.
காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்த அவ்விருவரையும், பைக்கில் சென்ற முப்பது பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதலில் ஈடுபடுள்ளனர்.
இரண்டு பேரும் கால்நடைகளை கடத்தி செல்வதாக கூறி அவர்கள் இருவரையும் இரும்பு கம்பிகளால் தாக்கி உள்ளனர். கம்புகள் மற்றும் காலணிகளை கொண்டும் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். பலத்த காயம் அடைந்த இருவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சமபவம் குறித்து பெல்டாங்கடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராஜேஷ் பட், ராகேஷ் பட், குருபிரசாத், லோகேஷ், மற்றும் சிதானந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்