சசமையலறையில் சோறு பொங்கவும், குழந்தை பெற்று வளர்க்கவும் மட்டும் பழக்கப்பட்டவர்கள் மலபாரி முஸ்லிம் பெண்கள் எனும் அவப்பெயர் சமீபகாலமாக பல படித்த, உத்யோகஸ்த்தத்தில் சாதித்த பெண்களின் வாயிலாக துடைத்தெறியப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சமீபத்தில் துபையில் நடைபெற்ற சர்வதேச நீதிமன்ற பரிபாலனங்கள் கமிட்டியில் உரையாற்றிய ரிதா ஸஹர் மஹ்மூத், தற்போது தனது கருத்துக்களத்தை ஐநா மன்றம் வரை எடுத்துச்சென்றுள்ளார். கேரள, கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த இவர் துபையின் மிடோஸ் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவியாவார். இந்த பள்ளியின் மாணவர்தலைவியாக இருந்து, ஐநாவின் மாடல் நீதிமன்றத்தில் யுக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் மறைமுக மற்றும் பொருளாதார நேரடி பிரச்சனைகளை பற்றி இவர் ஆற்றிய பிரசங்கம் அங்குள்ளவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.