Muslims Shahi Idgah

கியான்வாபி பள்ளிக்கு அடுத்ததாக ஷஹி ஈத்கா பள்ளிவாசல்-அங்கு தான் கிருஷ்ணர் பிறந்தார் என கூறும் இந்து தரப்பு !

கிருஷ்ண ஜென்மபூமி நிலத்தில் மதுரா ஷஹி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டது என இந்து தரப்பு கூறி வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் 1991 க்கு எதிராக இருந்த போதும் அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்யாமல் மே 19, வியாழன் அன்று மதுரா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள போவதாக மாவட்ட நீதிபதி ராஜீவ் பார்தி கூறியுள்ளார் . “வழக்கு முன்னர் பதியப்பட்ட அதன் அசல் எண்ணில் தொடரும் .” என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சீராய்வு மனுவை இந்து தெய்வங்களான ஸ்ரீகிருஷ்ணா விராஜ்மான் மற்றும் அஸ்தான் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி, தங்கள் ‘நண்பர்களான’ ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் பலர் மூலம் தாக்கல் செய்தனர். வக்கீல்கள் ஹரி சங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் பங்கஜ் குமார் வர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

மசூதி கட்டப்பட்ட 13.37 ஏக்கர் நிலம் கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று இந்து மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

வழக்கு பின்னணி:

மசூதி வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் இந்து சடங்குகளை நடத்துவதற்கு ஆண்டு முழுவதும் அனுமதி கோரிய வழக்கின் அடிப்படையில் ஒரு புறம் வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி பள்ளிவாசல் உள்ள இடத்தில முன்னர் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது மதுரா நீதிமன்றமும் அதே பாணியில் அடியெடுத்து வைத்துள்ளது.

மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன், மசூதியில் ‘சிவலிங்கம்’ (செயற்கை நீரூற்று) கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியது, மேலும் ‘சிவலிங்கம்’ இருக்கும் இடத்தைப் பாதுகாக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மசூதிக்குள் நுழைவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் முஸ்லிம்களின் உரிமைக்கு இடையூறு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மதுரா ஷஹி ஈத்காவை அகற்றுவதற்கான வழக்கு:

முன்னதாக, 30 செப்டம்பர் 2020 அன்று, மதுரா ஷஹி ஈத்கா மசூதியை அகற்றுவதற்கான வழக்கை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால் மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது, மேல்முறையீடு செய்தவர்கள் இந்திய அரசியலமைப்பின் 25 பிரிவின் படி வழக்கை முன்னெடுக்க உரிமை உண்டு என்று கூறினர்.

அதன் மூலம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை 2022 மே 5 அன்று மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மனுக்கு மேல் மனு:

இதற்கிடையில், அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய பொருளாளர் தினேஷ் கௌசிக் மதுரா சிவில் நீதிபதி மூத்த பிரிவு மதுராவில் ஷஹி இத்கா மசூதிக்குள் லட்டு கோபாலை பிரதிஷ்டை செய்யவும், அங்கு பூஜை செய்யவும் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.

வக்கீல்கள் மகேந்திர பிரதாப் சிங் (ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி முக்தி நியாஸ் தலைவர்) மற்றும் ராஜேந்திர மகேஸ்வரி ஆகியோரால் மே 17 அன்று, மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் மசூதி வளாகத்திற்கு சீல் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதில், ‘சிவ்லிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கியான்வாபி மசூதி வளாகத்தின் இடத்தை சீல் வைக்க வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை அவர்கள் குறிப்பிட்டனர்.

வழக்கறிஞர்கள் சிங் மற்றும் மகேஸ்வரியின் மனுவை சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம் ஜூலை 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் 1991 சொல்வது என்ன ?:

1991 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம்.இச்சட்டத்தின் படி 1947 இல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அதை நிலை தொடர செய்ய வேண்டும்.

பிரிவு 3 : ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தளத்தை மற்ற மதத்தின் வழிபாட்டு தலமாக மாற்றவும். ஒரே மதத்தில் இருக்கும் ஒர் பிரிவின் வழிபாட்டு தளத்தை மற்ற பிரிவின் வழிபாட்டுதளமாக மாற்றவும் தடை பிரிவு 4(2) மத வழிபாட்டுதளங்களின் தற்போதையை நிலையை மாற்ற கோரும் அனைத்து வழக்குகள் , மேல் முறையீடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் இச்சட்டத்தை அமுல்படுத்துவதின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படும்ஆகஸ்ட் 15, 1947 க்குப் பிறகு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றினால் சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்.

மாநில அரசுகள் வழிபாட்டுத்தளங்கள் 1947 ஆகஸ்ட் 15 ம் தேதியில் இருந்த அதே நிலையை இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்