Political Figures

இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் மன்மோகன் சிங் ..

இன்றைய ஹிண்டுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகிறார். பொருளாதாரச் சிக்கல், சமூக அமைதியின்மை, சுகாதார ஆபத்து.

இரண்டாம் மற்றும் மூன்றாம் விஷயங்கள் முதல் விஷயத்தை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்கிறார். சமூக அமைதியில்லாமல் வேறு எந்த வரி சீர்திருத்தமும், கார்ப்பரேட்களுக்கு சலுகைகளும் வேலை செய்யாது என்று வாதிடுகிறார்.

அவர் இந்த அரசுக்கு பரிந்துரைப்பது மூன்று விஷயங்கள்:

1) அரசின் எல்லாத் துறைகளையும் கொரோனா வைரசுக்கு எதிரான முயற்சியில் இறக்குவது.
2) உடனடியாக CAA, NRC போன்ற ஆபத்தான விஷயங்களை நீக்கி சமூக அமைதியை கொண்டு வருவது.
3) பொருளாதார அறிஞர்களின் அறிவுரையுடன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் தெளிவான நிதி முடுக்கலை (fiscal stimulus) வரையறுத்து செயல்படுத்துவது.

ஒரு மாபெரும் பிரச்சினை மாபெரும் முன்னேற்றத்துக்கு காரணியாக அமையலாம் என்கிறார். (A moment of deep crisis can also be a moment of great opportunity.) இதற்கு உதாரணமாக 1991ல் இந்தியா மாபெரும் சிக்கலில் மாட்டி இருந்த நேரத்தில் அந்தப் பிரச்சினையை திறமையாக பயன்படுத்தி பொருளாதார தாராளமயம் கொண்டு வந்து பெரும் தேச முன்னேற்றத்துக்கு வித்திட்டதை சொல்கிறார்.