ஹைதராபாத்: அஜய் குமார் என்பவர் உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் (Swiggy) அசைவ உணவு(Chicken 65) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். உணவை கொண்டு வந்து கொடுப்பவர் முஸ்லிம் (டெலிவரி பாய் ) என்று அறிந்து கொண்ட அவர், உணவை பெற்று கொள்ள மறுத்துள்ளார்.
அலியாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார், ஃபாலக்னுமாவில் உள்ள கிராண்ட் பவர்ச்சி உணவகத்தில் இருந்து ஸ்விக்கி மூலம் சிக்கன் -65 ஆர்டர் செய்துள்ளார். அத்துடன் “உணவில் காரம் கம்மியாக இருக்கனும்.. உணவை ஒரு இந்துவிடம் மட்டுமே கொடுத்து அனுப்பவும்..இதை வைத்து தான் ரேட்டிங் செய்வேன் ” என்று செய்தியையும் ஸ்விக்கிக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் சுலைமான் என்ற ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர பெயரை வைத்து முஸ்லிம் என்று அறிந்து கொண்ட அவர் கடும் கோபம் கொண்டார். அதன் பிறகு சுலைமானிடம் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் சுலைமான் முஸ்லிம் என்பதால் உணவை பெற்று கொள்ள மறுத்துள்ளார் அஜய்.
அதுமட்டுமின்றி ஒரு படி மேலே சென்று ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு ஏன் முஸ்லிமை அனுப்பினீர்கள் என்று கூறி கன்னாபின்னா என திட்டியுள்ளார். மேலும் இதனால் 95 ருபாய் ரத்து செய்யும் (cancellation charges) கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஒரு முஸ்லிமிடமிருந்து உணவை பெற்று கொள்ள முடியாது என்றும் கூறியுளளார்.
இதில் கொடுமை என்னவென்றால் அவர் ஆர்டர் செய்த “கிராண்ட் பவர்ச்சி உணவகம்” முஸ்லிம் நிறுவனமாகும். அசைவை உணவை ஆர்டர் செய்து விட்டு .. அதுவும் முஸ்லிம் கடையில் ஆர்டர் செய்து விட்டு முஸ்லிம் டெலிவரி பையனாக இருந்தால் உணவை பெற்று கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளது தான்.
இந்த சம்பவம் திங்கள்கிழமை(21-10-19) இரவு நடந்ததுள்ளது. இது தொடர்பாக சுலைமான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் அவரது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை . அதன் பின்னர் புதன்கிழமை, எம்பிடி (M B T ) இயக்கத்தின் தலைவர் அம்ஜதுல்லா குமார் போலீசாருக்கு ட்வீட் செய்துள்ளார் . அதன் பின்னர் தான் சுலைமானை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டனர்.
தற்போது பிறந்துள்ள புதிய இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இது 2 வது சம்பவமாகும். முன்னதாக சோமட்டோவிலும் டெலிவரி செய்பவர் முஸ்லிம் எனும் காரணத்தால் ஜெய்ப்பூரில் ஒருவர் உணவை வாங்க மறுத்தார். இதற்கு சோமட்டோ நிறுவனம் ” உணவிற்கு மதமில்லை” என்று கூறி தக்க பதிலடி கொடுத்திருந்தது. மேலும் இதனால் விற்பனை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. இந்திய அனைத்து மதத்தவரையும் கொண்ட பன்முக தன்மை கொண்ட நாடு என்று கூறி இருந்தது.
எனினும் இம்முறை ஸ்விக்கி விஷயத்தில் பெரிய அளவிற்கு செய்தி கூட ஊடகங்களில் வெளியாகவில்லை.. இதன் மூலம் வெறுப்புணர்வும்.. முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கும் வழமையாக்க படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் சோமாட்டோ போன்று உரத்த குரலில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இது தவறு என்றும் கூட ஸ்விக்கி கூறவில்லை, இது தொடர்பாக ஸ்விக்கி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது