Image used for representational purposes -istock
கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் இருந்த பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சிதைந்த (தலையில்லா)உடல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
குழந்தையின் தலையை கண்டுபிடிக்கும் பணி மோப்ப நாய்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மூத்த ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் கடுமையான காயங்களை கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரிங்கு :
இந்த வழக்கில் குற்றவாளியான ரிங்கு என்ற கயவன் கிர்தி மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இவன் இவ்வாறு செய்துள்ளது முதல் முறையன்று , இவன் இதற்கு முன்னரும் டெல்கோ , சக்ச்சி போன்ற இடங்களில் உள்ள குழந்தைககிடமும் இவ்வாறே செய்துள்ளான்.
சிசிடிவி காட்சிகள் ஒரு நபர் தனது கைகளில் தூங்கும் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காட்டியது. மறுநாள் காலை காணாமல் போனதாக அவரது தாயார் தெரிவித்தார். அந்த பெண் தனது கூட்டாளி ஒருவரை சந்தேகிப்பதாக காவல் நிலையத்தில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரில் அந்த நபரும் அடங்குவார்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவனான ரிங்கு சாஹு என்பவன் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாவான். இவனின் மூத்த மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்
இந்துஸ்தான் டைம்ஸிற்கு பேட்டி அளித்த துணை போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) நூர் முஸ்தபா அன்சாரி, “ஜெம்கோ-ஆசாத்பஸ்தி வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு வயது குழந்தையை கொலை செய்யும் நோக்கில் கடத்தப்பட்டதற்காக இதற்கு முன்பு ரிங்கு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டான். சில வாரங்களுக்கு முன்பு தான் அவன் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளான் . ” என்று கூறினார்.
பாஜக ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு :
ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறைகள் அதிகரித்து வரும் அதே வேலையில் இவ்வாறான கேடுகெட்ட செயல்களும் அதிகரித்து வருவது அம்மாநில பாஜக அரசு ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை படம் பிடித்து காட்டுகிறது.
அரபு நாடுகளில் அமல் படுத்தப்படும் இஸ்லாமிய சட்டத்தில் இவ்வாறான குற்றங்களுக்கு அதிக காலம் தாழ்த்தாமல் (தலை வெட்டப்பட்டு )மரண தண்டனை வழங்கப்படும். இதை நம் நாட்டிலும் அமல் படுத்தினால் தான் இவ்வாறு நடப்பதை தடுக்க இயலும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.