BJP Intellectual Politicians

“அனைத்து பள்ளிகளிலும், மதரஸாக்களிலும் ஹனுமான் பஜனையை கெஜ்ரிவால் அரசு கட்டாயப்படுத்த வேண்டும்” – பாஜக பொது செயலாளர் கோரிக்கை ..

பாஜக தலைவர்கள் தொடர் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது, சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தவருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசுவது என இது தொடர்பாக செய்திகள் வெளியாகி வருவது வாடிக்கை ஆகிவிட்டது. இந்நிலையில் இன்றைக்கான சர்ச்சை கருத்தில் இடம் பெறுபவர் பாஜக பொது செயலாளர், கைலாஷ் விஜயவர்ஜியா.

டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார். கூடவே சர்ச்சை கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஹனுமான் பஜனை கட்டாயப்படுத்தப்படணும்:

அரவிந்த் கெஜ்ரிவால் ஜிக்கு வாழ்த்துக்கள்! ஹனுமானின் அருள் வேண்டி யார் வந்தாலும் நிச்சயமாக அவருடைய ஆசீர்வாதம் கிடைக்கும். இனி டில்லியின் அனைத்து பள்ளிகள், மதரஸாக்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில், ஹனுமான் சாலிசாவின் (பஜனை பாடல்) பாராயணம் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. . ‘டெல்லி’ குழந்தைகள் பஜ்ரங்பலியின் ஆசீர்வாதத்தை ஏன் இழக்கவேண்டும்? ” என கைலாஷ் விஜயவர்ஜியா ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

Aravind jee ko jeet kee badhaee ! nishchit hee jo hanumaanajee kee sharan mein aata hai use aasheervaad milata hai. ab samay aa gaya hai ki hanumaan chaaleesa ka paath dillee ke sabhee vidyaalayon, madaraso sahit sabhee shaikshanik sansthaanon mein bhee jarooree ho. bajarangabalee kee krpa se ab dilleevaasee bachche kyon vanchit rahe❓
நெட்டிசன்கள் கண்டனம்:

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தை பின்பற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தில எந்த ஒரு மதத்தின் வழிபாட்டையும் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக படு மோசமாக தோல்வி அடைந்தும் கூட பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read: அவல் பொரி சாப்பிட்டால் பங்களாதேஷி..

கெஜ்ரிவாலின் புதிய பரிணாமம்:

பாஜக பொது செயலாளர் இவ்வாறு பதிவிடவும் ஒரு காரணமுண்டு. கெஜ்ரிவால் தன்னை ஒரு ஹனுமான் பக்தராக காட்டி கொள்ள ஆரம்பித்துள்ளார். மேலும் இந்து மதத்தின் மீது அதிக பற்று கொண்டவராகவும், ஷஹீன் பாகில் உள்ளவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை அவர் தெரிவித்தது இந்துத்துவாவினரை திருப்தி படுத்துவதற்காக, அவர்களின் வாக்குகளை பெற்று கொள்வதற்காக என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே கெஜ்ரிவாலின் இந்த புதிய அணுகுமுறையை எதிர்ப்பாராத பாஜக தற்போது ஹனுமான் பெயரால் கெஜ்ரிவாலை சீண்டிப்பார்க்க முனைகிறது என்கின்றனர் விமர்சகர்கள்.