Political Figures

மத்திய நிதி அமைச்சருக்கு கணித பாடமெடுத்த மஹுவா மொய்த்ரா ..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மோடி அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. பிரதமர் வெறும் அட்வைஸ் மட்டுமே வழங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டை உண்மை படுத்தும் வகையில் கொரோனாவை எதிர்த்து களமாட மாநில அரசாங்கங்கள் கேட்கும் நிதியில் மிகவும் சிறிய அளவிலேயே மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் தமிழகமும் விதி விலக்கல்ல. மேலும் PM cares ன் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவும் இல்லை.

இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கணக்கு பாடம் ஒன்றை எடுத்துள்ளார்.

மாண்புமிகு எஃப்.எம் க்கான துரித கணக்கு பாடம்:

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் கோடிக்கும் மேல் மீதம் உள்ளது. உரிமை கோரப்படாத பி.எப் பணத்தில் 40 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. அதேபோன்று கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் செஸ்ஸில் 35 ஆயிரம் கோடிக்கும் மேல் மீதம் உள்ளது.

இதன்மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தியாவில் மிகவும் ஏழைகளாக உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு தலா 7,500 ரூபாய் வழங்க இயலும். இதனால் 25 கோடி மக்கள் பயன் அடைவதை உறுதி செய்ய முடியும் என டுவிட்டரில் நிதி அமைச்சருக்கு கணக்கு பாடம் எடுத்துள்ளார் மஹுவா.

இதற்கு பலரும் வரவேற்பு தந்துள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியான சசி தரூர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

எனினும் இந்த ஆக்கபூர்வமான கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை.