பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது.
ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையன்று கொல்லப்பட்டதாகவும் உபி போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரத்தம் வெளியேறிய நிலையில்:
இளைய சிறுமி வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இருந்தார். சிறுமியின் தலை மற்றும் கழுத்து பகுதிகளிலும் காயங்களை காண முடிந்தது. உடலின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ”என்றார் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த்.
“மூத்த சிறுமியின் கழுத்திலும் காயங்கள் இருந்தன. யாரோ அவளை கழுத்தை நெரிக்க முயன்றதாக தெரிகிறது. இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது, அவர் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார் ” என காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் மேலும் கூறினார்.
நடந்த சம்பவம்:
அருகிலுள்ள மதரஸாவின் மாணவர்களான சிறுமிகள் திங்கள்கிழமை காலை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தங்கள் பாடங்களில் கலந்து கொள்ளச் சென்றனர். மதியம் 1 மணியளவில் மதரஸாவை விட்டு சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாலை 6 மணியளவில் சிறுமியரின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக ஆனந்த் கூறினார்.
“மற்ற காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் படையினரும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும்பணி முடக்கி விடப்பட்டுளளது. இளைய சிறுமி இரவு 8 மணியளவில் ஒரு சாலையின் அருகிலுள்ள வயலில், அவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டார். சுமார் மூன்று மணி நேரம் கழித்து பிறகு, இளையவள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் மூத்த சிறுமியும் கண்டெடுக்கப்பட்டார், ”என்றார் எஸ்.பி. ஆனந்த்.
போலீசார் தேடல்:
7 வயதான மூத்த சிறுமியும் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றத்திற்கான நோக்கம் குறித்து இது வரை துப்பு கிடைக்கவில்லை.
முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பல சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
ஷாஜகான்பூரின் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறியதாவது : “இம்மாவட்டத்தின் காந்த் பகுதியில் வசிக்கும் சகோதரிகள், உடலில் பலத்த காயங்களுடன் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டனர். இளைய சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார், மற்றவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார் ”
வட இந்தியாவில் பெரும்பான்மை மீடியாக்கள் கோதி மீடியாவாக உள்ளதால் இந்த செய்தி பெரிது படுத்தப்படாமல் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது.