தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம்.
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கல்வியுடன் பாடங்களை தொடங்க என்.ஐ.ஓ.எஸ் (NIOS) திட்டமிட்டுள்ளது. “துவக்கத்தில் 100 மதரஸாக்களில் தொடங்க உள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் 500 மதரஸாக்களில் விரிவுபடுத்துவோம்” என்று என்.ஐ.ஓ.எஸ் தலைவர் சரோஜ் சர்மா கூறினார்.
வேதாஸ், யோகா, அறிவியல், தொழில் திறன், சமஸ்கிருத மொழி, ராமாயண காவிய விவரிப்புகள், பகவத் கீதை போதனைகள் மற்றும் பானினி முன்மொழியப்பட்ட மகேஸ்வர சூத்திரங்கள் உள்ளடக்கிய ‘பாரதிய ஞான பரம்பரா’ (இந்திய அறிவு பாரம்பரியம்) குறித்த 15 கோர்ஸ்களை நியோஸ் தயாரித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைப்பு:
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை நொய்டாவில் உள்ள என்.ஐ.ஓ.எஸ் தேசிய தலைமையகத்தில் பாடங்கள் உள்ளடக்கிய அட்டவணையை வெளியிட்டார்.
“பண்டைய மொழி, அறிவியல், கலை மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சக்தி வாய்ந்த கலவையே இந்தியா. மேலும் இந்தியா அதன் பண்டைய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியுடன் அறிவு வல்லரசாக மாற தயாராக உள்ளது. இந்த படிப்புகளின் பயனை மதரஸாக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்திற்கும் பெருமளவில் விரிவுபடுத்துவோம்” என அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறினார்.
முதன்மை, இடைநிலை மற்றும் மூத்த இடைநிலை மட்டங்களில் திறந்த மற்றும் தொலைதூர கல்வி மூலம் படிப்புகளை நடத்தும் இரண்டு தேசிய வாரியங்களில் என்.ஐ.ஓ.ஸும் ஒன்றாகும். என்.ஐ.ஓ.எஸின் பாடத்திட்டம் தேசிய மற்றும் மாநில வாரியங்களுக்கு இணையாக கருதப்படுகிறது.
கர்நாடக மதரஸாக்களில் உள்ள 30,000 மாணவர்களுக்கு யோகா குறித்த பாடப் பொருளில் பதஞ்சலி கிருதசூத்ரா, யோகாசூத்ரா பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், பிராணயம், தளர்வு பயிற்சிகள், கோப மேலாண்மை பயிற்சிகள், செறிவு மற்றும் நினைவக மேம்பாட்டு பயிற்சிகள் கொண்டு செல்ல நியோசின் திட்டம் வழி வகுக்கும்.
தொழிற்துறை பாடங்கள்:
தொழிற்துறை திறன் பாடத்திட்டத்தில் நீர்ப்பாசனம், மாடு வளர்ப்பு, பசு மாடுகள் மற்றும் சுகாதாரம், தோட்ட பராமரிப்பு, தையல் மற்றும் அறுவடை, காய்கறி சேவை, கரிம வேளாண்மை போன்றவை இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, படுக்கைகளை உருவாக்குதல், பண்ணைகளுக்கு பயோமெட்ரிக் கட்டுதல், ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துதல் அன்றாட வாழ்க்கை, சமையல் மற்றும் சேவை முறைகள் ஆகியவை குறித்த பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அறிவியல் பாடங்கள்
நீர், காற்று, தாவரங்கள் மற்றும் வேதங்களில் நிலப் பாதுகாப்பு, படைப்பின் தோற்றம், பஞ்சமாபூதம், பூமி மற்றும் இயற்கை வளங்கள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியதாக அறிவியல் பாடங்கள் உள்ளன..
திறந்த முறை கல்வியில், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்யலாம், எனவே இது ஒரு கட்டாய கூறு அல்ல என என்.ஐ.ஓ.எஸ் இன் உதவி இயக்குனர் (கல்வி) ஷோயாப் ராசா கான் தெரிவித்துள்ளார்.