ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், ஈஷாவில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் பங்கேற்றனர். ஈஷாவில் துறவிகளாக வைக்கப்பட்டுள்ள பெண்களை மீட்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
மண்வளப் பாதுகாப்பை காக்க வேண்டும் என்ற பெயரில் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஈஷா நிறுவனர் ஜக்கி, இன்று ஜூன் 21-ம் தேதி கோவை திரும்ப உள்ள நிலையில்,நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.