Kashmir Lynchings

ராஜஸ்தானில் 17 வயது காஷ்மீரி இளைஞர் கொடூர கொலை !

பிப்ரவரி 5 ம் தேதி இரவு, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் காஷ்மீர் இளைஞர் ஒருவரை சில குண்டர்கள் கொடூரமாக தாக்கியதில் உயிர் இழந்துள்ளார்.

குடும்ப பின்னணி :

கொல்லப்பட்டவர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குனன்-போஷ்புராவை வசிப்பிடமாக கொண்ட குலாம் மோஹி யு தின் கான் என்கின்ற பாசித் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாசித் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு தான் அவரது தந்தை மரணித்துள்ளார். வீட்டில் மூத்தவரான அவருக்கு , மூன்று தங்கைகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்.

நடந்த சம்பவம்:

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு (டாடா மேஜிக்) பணியில் இருந்து வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் யார் அமர்வது என்று குண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மோஹி யு தினையும் அவரது சகாவையும் “Jaipur se hum ek ek Kashmiri ko nikal denge” ஜெய்ப்பூரில் உள்ள ஒவ்வொரு காஷ்மீரியையும் நாங்கள் விரட்டி அடிப்போம் என்று கூறியபடியே கொடூரமாக தாக்கினர் என சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருக்கும் அவரது காஷ்மீரி நண்பர் சல்மான் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

தலைவலி பிறகு கோமா பிறகு மரணம்:

மோஹி யு தின் தனது பிளாட்டை அடைந்தபோது, ​​கடுமையான தலைவலி இருப்பதாக கூறினார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மயக்கமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என சல்மான் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோஹி யு தின் கடுமையாக தலையில் தாக்கப்பட்ட காரணத்தால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6 ஆம் தேதி மரணித்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

போலீசார் விளக்கம்:

இந்த வழக்கு தொடர்பாக ஆதித்யா என்ற நபரை கைது செய்துள்ளதாக ஜெய்ப்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வெறுப்பு குற்றத்தில் அடங்குமா என விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கேட்டரிங் தொழிலாளர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Police FIR

இந்த சம்பவம் பல்வேறு இந்திய நகரங்களில் வசிக்கும் காஷ்மீர் சமூகத்தினரிடையே அதிர்ச்சி அலைகளைத் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்திய நகரங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது பல தாக்குதல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

காஷ்மீரில் குடும்பத்தார்:

உள்ளூர் போலீசார் தலையிட வேண்டும் மற்றும் இறந்த உடலை மீட்க குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் காஷ்மீர் குப்வாராவில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எஸ்பி அலுவலகத்தில் கூடியிருக்கிறார்கள். இறந்தவரின் உடல் சனிக்கிழமை காஷ்மீரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கலாம் என்று உள்ளூர் நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரிதாப நிலை:

உடலை காஷ்மீருக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் ரூ .30,000 செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்வதற்காக அவர் ஜெய்ப்பூர் வந்திருக்கிறார்.

https://twitter.com/aryansrivastav_/status/1226136992817172480

11 ஆம் வகுப்பில் பயின்று வந்த அவர் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக (உணவு வழங்குநராக) பணிபுரிந்து வந்துள்ளார்

kashmir
காஷ்மீர் குடும்பத்தினருக்கு உதவிடுங்கள்