பெங்களூர் மாநகரில் 3 நாள்களுக்கு (Dec 19 to Dec 21) யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ராஜீவ் கவுடா, சவ்மியா ரெட்டி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த வியாழ கிழமை (13-02-2020) அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரினிவாஸ் அவர்கள், CAA எதிர்ப்பு போராடங்கள் உட்பட எந்த போராட்டங்களும் 3 நாள்களுக்கு நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதம் என தீர்பளித்துள்ளார்.
மேலும் இது அரசியல் அமைப்பு சட்டம் Article 19 (b) மற்றும் (d) பிரிவுகளுக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்புகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
காவல் துறை ஆணையர் போராட்டம் நடத்த கூடாது என உத்தரவிட்டும் போராட்டாம் நடத்தியதால் தான் தடியடி நடத்தப்பட்டது என சொல்லப்படுகின்றது.
உயர் நீதிமன்ற உத்தரவு படி “போராட்டங்களுக்கு தடை வித்தித்து உத்தரவு போட்டாது தான் சட்ட விரோதமே தவிர”, அரசியல் சாசனம் Article 19 (b) மற்றும் (d) பிரிவுகள் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் ஜனநாயக வழியில் போராடியது சட்ட விரோதம் இல்லை.
நேற்று காவல் துறை ஆணையரை சந்தித்த குழுவினரின், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிகாட்டி காவல் துறை ஆணையரின் உத்தரவே சட்ட விரோதம் என நிருபித்து இருக்கலாம். அல்லது இபோதாவது இந்த தீர்பின் நகலை ஒவ்வொறு மாவட்ட காவல் துறை ஆணையர், காவல் துறை கண்கானிப்பாளர்களை சந்தித்து வழங்களாம்.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது காவல் துறை உட்பட அனைவரின் கடமை
பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது இந்த நீதிமன்ற உத்தரவுகளை சுட்டி காட்டி பேசலாம்
ஆக்கம் : S.சித்தீக்