Kashmir

காஷ்மீர்:மனித உரிமைகள் ஆணையத்தை மூடிய மோதி அரசாங்கம்!

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக கருதப்படும் மனித உரிமைகள் ஆணையம், தகவல் உரிமை ஆணையம் உள்ளிட்ட 7 ஆணையங்களை  ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக மூட  மத்திய மோதி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் வரும் அக்டோபர் 31 முதல் மொத்தம் ஏழு மாநில கமிஷன்கள் கலைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கலைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

கலைக்கப்பட்ட கமிஷன்கள்:

ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)
மாநில தகவல் ஆணையம் (SIC)
மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்வு ஆணையம் (எஸ்.சி.டி.ஆர்.சி)
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (SERC)
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் (SCPWCR)
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம் (SCPwD)
மாநில பொறுப்புக்கூறல் ஆணையம் (எஸ்ஏசி).

பல யூனியன் பிரதேசங்களில்  இதற்க்கு இணையான அமைப்புகள் தற்போதும் செயல்பட்டு வரும் வேலையில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் இந்த ஆணையங்களை மூடுமாறு உத்தவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.