பொகாரோ: ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ பகுதியில் உள்ள சி.சி.எல் கோவிந்த்பூர் காலனியில் உள்ள கார் ஒன்றில் பேட்டரியை திருட வந்ததாக கூறி முபாரக் அன்சாரி மற்றும் அவரது நண்பர் அக்தர் அன்சாரி ஆகிய இருவர் மீதும் கடந்த செவ்வாய்க்கிழமை (5-11-19) அன்று மூர்க்க கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில் முபாரக் அன்சாரி என்பவர் அடித்தே கொல்லப்பட்டார்.
அவரது நண்பர் அக்தர் அன்சாரி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிலரை கடுங்காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக திரட்டு பட்டம் சூட்டி தப்ரெஸ் அன்சாரி என்பவரை இரவு முழுவதும் காட்டுமிராண்டி தனமாக அடித்தே கொலை செய்தது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.