Islamophobia Jharkand Lynchings Muslims

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!

கடந்த ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த சமயம், ஜார்க்கண்டில் மிருகத்தனமாக இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரியின் கொடூர கும்பல் வன்முறை சம்பவமே இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் ஜார்கண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து பிரபல ஊடகமான ‘தி குவின்ட‘ செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜூ அன்சாரி என்ற நபர் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஹசாரிபாகின் கிட்டி என்ற இடத்தில் தாக்கப்படுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், வன்முறை கும்பலுக்கு எதிராக எதையும் செய்வதற்குப் பதிலாக, அவர்களிடமே அனுதாபத்துடன் உரையாடுகின்றனர். அதுமட்டுமின்றி கொடூரமாக தாக்கப்பட்ட அன்சாரியை உடம்பில் ஒட்டு துணியின்றி இழுத்து செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது.

பெயரைக் கேட்டவுடன் தாக்குதல் ஆரம்பம்:

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்துள்ளது அன்சாரி தனது மாமனார் வீட்டில் உள்ள தனது நிறைமாத கர்ப்பிணியை பார்க்க சென்றுள்ளார். பார்த்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பி வருகையில் வண்டியில் உள்ள பெட்ரோல் தீர்ந்து விட்டது. பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் செய்வதறியாது திகைத்து நின்ற அன்சாரியை நோக்கி சிலர் வந்து அவரது பெயரை கேட்டுள்ளனர். பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே முஸ்லிம் என்பதை அறிந்துகொண்டு மிகவும் கொடூரமாக தாக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் தாக்கும்போது கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு ஏசியவாறு.. நீ தேச துரோகி என்றும் கொரோனவை பரப்பவே இங்கு வந்துள்ளாய் எனக் கூறியும் தாக்கியுள்ளனர்.

Read Also: மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் என நடந்த சம்பவம் குறித்து அன்சாரியின் தந்தை அலி ஜான் கூறியுள்ளார்.

அவரது பெயரைக் கேட்டவுடனேயே திருடன் திருடன் என சப்தமிட்டவாறே கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். போலீசாருக்கு முன்னிலையிலேயே உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் அவரை கொடூரமாக தாக்கினர்.நான் ஒரு அப்பாவி நான் எதையும் செய்யவில்லை என்று எனனது மகன் மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. போலீசாரும் எனது மகனை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .

– அன்சாரியின் தந்தை அலி ஜான்.

உடம்பில் துணி இல்லாமல் அழைத்து சென்ற போலீஸ்:

அன்சாரியின் உடல் முழுவதும் கொடூரமாக தாக்கப்பட்ட அடையாளங்களை காண முடிகிறது. குறிப்பாக அந்தரங்க பாகங்களிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/SazidSaeed/status/1251925723775991819

அன்சாரியின் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்த செய்தி காவல் நிலையத்திலிருந்தே கிடைத்தது. அதன் பிறகு, மறுநாள் காலை அதாவது ஞாயிற்றுக்கிழமை, அலி ஜான் அன்சாரியை வீட்டிற்கு அழைத்து வந்தார். காயமடைந்த அன்சாரிக்கு சிகிச்சையளிப்பதற்கு பதிலாக, காவல்துறையினர் அவரை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளது ஒரு மிகவும் மோசமான செயல்.

உயர் அதிகாரிகளின் கவனம் :

லாக்டவுன் அமலில் உள்ள போது 10-12 பேர் எவ்வாறு கூடமுடிகிறது, காவல்துறை ஏன் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்த சம்பவம் குறித்துதெரிந்து கொண்ட உயர் அதிகாரிகள், அன்சாரியின் வீட்டிற்கு மீண்டும் போலீசாரை அனுப்பி ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்

“உயரதிகாரிகள் வீட்டிற்கு வந்தனர் அவர்கள் அன்சாரியை அழைத்துக்கொண்டு ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் அங்கேதான் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர்கள் என் சகோதரனிடம் எங்கெல்லாம் காயம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டனர் அதற்கு எனது சகோதரர் ‘ நான் எங்கெங்கே என்று சொல்வேன்.. ? முழு உடலிலும் தான் சார்’ என்றார்.

– ஷம் சீர் அன்சாரி, ராஜூ அன்சாரியின் சகோதரர்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்:

இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹசாரிபாக் எஸ்.பி. மயூர் படேல் கன்ஹையா லால் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ளவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், சம்பவத்தில் யாரும் இறக்காததால், இது கும்பல் கொலை செய்யப்பட்ட ஒரு வழக்காக கருத எஸ்.பி மறுத்துவிட்டார்.

ராஜு வீட்டில் இருக்கும் பட்ராட்டு காவல் நிலைய பொறுப்பாளர் ஆதில் ஹுசைன், ராஜுவுக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்று தெரிவித்தார் ராஜு ஒரு செங்கல் சூளை தொழிலாளி.

நாங்கள் தொடர்ந்து செயல்பட உங்கள் பங்களிப்பு அவசியம்.