Lynchings

ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல்.

ஜார்கண்டில் மீண்டும் வெறி செயல் !

ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள மகாத்மா காந்தி (எம்.ஜி) மார்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை 05-07-19) மூன்று முஸ்லிம் இளைஞர்களை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பின்னர் தாக்கி உள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தார் சர்ச் காம்ப்ளக்ஸ் அருகே எம்.ஜி.மார்கில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் மாலை வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“போராட்டம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க எம்.ஜி.மார்க் வழி நெடுகிலும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தற்போது அப்பகுதி போலீசார் கட்டுக்குள் உள்ளது . மேலும் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், ”என்று மூத்த போலீஸ் சூப்பிரண்டு அனிஷ் குப்தா சனிக்கிழமை தொலைபேசியில் தி ஹிந்து நாளிதழிற்கு தெரிவித்தார்.

Image Credit : PTI

இது குறித்து டோராண்டா காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான் மூவரில் ஒருவரான அமீர் வாசிம் புகார் அளித்துள்ளார், அமீர் வாசிம், மற்றும் அவரது நண்பர்களான அல்தாஃப் அலி மற்றும் அலி அகமது ஆகியோர் புகைப்படம் எடுக்க விமான நிலைய பகுதிக்கு சென்றுள்ளனர்.

“நாங்கள் குர்தா பைஜாமா உடையில் எங்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தோம், சிலர் திடீரென எங்களை முற்றுகையிட்டனர், உடனே சரம்வாரியாக எங்களை தாக்க ஆரம்பித்தனர், “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடச் சொன்னார்கள். கூட்டம் அதிகரித்ததால், நாங்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டோம், ”என்று திரு. வசிம் கூறினார், பிர்சா முண்டா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டனர்.

ஜார்கண்டின் சரிகேலா-கர்சவன் மாவட்டத்தில் கடந்த மாதம் தப்ரெஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை ஒரு காட்டுமிராண்டி கும்பல் அடித்து கொலை செய்தது.அம் மாநில காங்கிரஸின் கூற்றுப்படி, இவ்வாறான தாக்குதல்கள் 2016 ல் இருந்து ஜார்கண்டில் மட்டுமே இதுவரை 18 சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ராஞ்சியில் தங்கள் சமூக உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ‘அக்ரோஷ்’ பேரணியை நடத்தினர் என்பது குறிப்பிட தக்கது.