ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேலிய பொலிசார் சோதனை நடத்தினர், அடுத்தடுத்த நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 152 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதிகாலை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மசூதியில் கூடியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடியும் முன்பே இஸ்ரேலிய போலீசார் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்ததாக பள்ளியை நிர்வகிக்கும் இஸ்லாமிய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போலீசார் தாக்குதல்:
ஆன்லைனில் பரவும் வீடியோக்கள் இஸ்ரேலிய போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசுவதையும் அதற்கு பதிலடியாக பாலஸ்தீனியர்கள் கற்களை வீசுவதையும், காட்டுகிறது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனைகளுக்கு வெளியேற்றப்பட்டதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் அவசர சேவை கூறியது. பள்ளிவாசலின் காவலர்களில் ஒருவர் ரப்பர் புல்லட்டால் கண்ணில் சுடப்பட்டதாக இஸ்லாமிய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ்களுக்கு தடை:
ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மசூதியை அடைவதற்கு இஸ்ரேலிய படைகள் தடையாக இருந்ததாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. பல நூற்று கணக்கான காயமடைந்த தொழுகையாளிகள் வளாகத்திற்குள் சிக்கியுள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய போலீஸ் சோதனையின் போது குறைந்தது 300 பாலஸ்தீனியர்களை கைது செய்ததாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போலீஸ் படைகள் தெரிவித்தன.
பாலஸ்தீனியர்களின் குழு ஒன்று மேற்குச் சுவரின் அருகில் உள்ள யூத பிரார்த்தனை இடத்தை நோக்கி பாறைகளை வீசத் தொடங்கிய பின்னர், கூட்டத்தை “கலைக்க மற்றும் பின் தள்ள” உள்ளே சென்றதாக இஸ்ரேலிய போலீசார் கூறினர்.
இஸ்ரேலிய போலீசாரின் பொய்:
எனினும் இஸ்ரேலிய போலீசாரின் வழக்கம் போலான பொய்யை, அல் ஜசீராவின் நஜ்வான் என்ற ஊடகவியலாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இஸ்ரேலிய போலீஸ் படைகள் எந்த வித காரணமுமின்றி அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் நுழைந்து, காலை தொழுகையை தொடர்ந்து கிப்லி தொழுகை நடத்தப்படும் இடம் அருகே வழிபாட்டாளர்கள் தாக்கியது என்று தெரிவித்துள்ளார்.
யூத பஸ்கா விடுமுறையின் போது அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் தாக்குதல் நடத்தவும், அதன் முற்றங்களில் மிருக பலிகளை வழங்கவும் தீவிர வலதுசாரி யூதக்பயங்கரவாத குழுக்கள் அழைப்பு விடுத்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டது, இது பண்டைய காலங்களிலிருந்து நிகழவில்லை என நஜ்வான் தெரிவித்துள்ளார்.
குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொலை:
சமீபத்திய வாரங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்களின் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைதுகள் மற்றும் இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் புதன்கிழமை முதல் ஏழு பேர் உட்பட பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் புனித ரமழான் மாதத்தை அனுசரிப்பதால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்காக அல்-அக்ஸாவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரமழானின் போது அல்-அக்ஸா மீதான சோதனைகள் மற்றும் தாக்குதல்கள் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி மீதான 11 நாள் தாக்குதலாக அதிகரித்தது.
இந்தப் போர் குறைந்தது 260 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
இந்த ஆண்டு ரமலான் யூத பாஸ்கா விடுமுறை மற்றும் கிறிஸ்தவ புனித வாரத்துடன் ஒரு சேர அமைந்துள்ளது.