America Islamophobia

இந்திய அரசை இஸ்லாமிய வெறுப்பை உமிழும் அரசாக அறிவிக்க, அமெரிக்காவிலுள்ள செயிண்ட் பால் நகரக் கவுன்சில் முடிவு!

“இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி, இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் கொள்கை”யை இந்தியா பின்பற்றுவதைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரு வார கால தாமதத்திற்குப் பிறகு செயிண்ட் பால் நகர நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்ஸிலின் மின்ன சோட்டா மாகாணப் பிரிவு, மிட்செல் ஹேம்லின் சட்டப் பள்ளியின் ‘ இன அழிப்பில்லா உலகம்’ மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற இந்நடவடிக்கையை இந்து அமெரிக்க நிறுவனம், மின்னசோட்டாவின் இந்திய சங்கம், உலகளாவிய ஒடுக்கப்பட்டோருக்கான கூட்டணி ஆகியவை எதிர்த்தன.

https://twitter.com/FrankJo69777661/status/1263370843016626176?s=19

5-க்கு 0 என்ற கணக்கில் இந்த அடையாள தீர்மானம் நிறைவேறியது. கவுன்சில் உறுப்பினர் கிறிஸ் டோல்பர்டோடு இணைந்து இத்தீர்மான நிறைவேற்றத்தில் பங்கெடுக்காமல் நடுநிலை வகித்த கவுன்சில் தலைவர் அமி ப்ரெண்ட்மோன், ” இந்திய அரசியலின் சிக்கலான தன்மை காரணமாக நான் இத்தீர்மானத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை; என்றாலும் மதச் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவதை இக்கவுன்சில் எதிர்க்கிறது”, என்று தெளிவுபடுத்தினார்.

“உலகளாவிய நோய்த் தொற்று, பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றால் ஒரு நிச்சயமற்ற நிலை நிலவக் கூடிய இச்சூழ்நிலையில் இது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகள் மிக ஆபத்தான வைரஸ் போன்றவை”, என்றும் டோல்பர்ட் விளக்கினார்.

கவுன்சில் உறுப்பினர்களான நெல்ஸி யாங், டாய் தாவோ மற்றும் ரெபேக்கா நோக்கர் ஆகியோர், ” முக்கியமான இவ்விஷயத்தில் பாராமுகமாக, அமைதியாக இருக்கக் கூடாது” என்பதாலேயே இத்தீர்மானத்தை ஆதரித்ததாக தெரிவித்தனர்.

“இத்தீர்மானம் எந்த தனி மனிதருக்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்குமான மதீப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கம்”, என தாவோ தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட பாரபட்சமான குடியுரிமைத் திருத்தச் சட்டம், அஸாமில் 6 லட்சம் முஸ்லிம்கள் உட்பட சுமார் இருபது லட்சம் பேரை NRC-ன் பெயரால் குடியுரிமையைப் பறித்து தடுப்பு முகாம்களில் அடைத்தது போன்ற பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முன்னதாக கவுன்சில் உறுப்பினரான பிரின்ஸஸ் கொண்டு வந்த தீர்மானத்தில் ” மோடி ஒரு தீவிரவாத இந்து நாட்டை அமைப்பதாக”, குற்றம் சாட்டப்பட்டது; ஆனால், மின்னசோட்டாவிற்கான இந்திய சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் கைவிடப்பட்டன.