உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயை எதிர்த்து உலகமே போராடி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணா பக்தர்களின் அமைப்பான இஸ்கான் (கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச அமைப்பு) அமைப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்கானின் இங்கிலாந்து பிரிவு 15,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மார்ச் 12 அன்று சோஹோ, லண்டனில், இஸ்கான் உறுப்பினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 1,000 க்கும் அதிமானோர் கூடினர். அப்போது எதிர்பாராத விதமாக பலருக்கும் கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது.
விமர்சனத்துக்கு மறுப்பு:
இந்நிலையில் இவர்கள் ஒன்றுகூடியது குறித்து சிறிய அளவில் விமர்சனம் எழுந்தது, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்கானின் ஆளும் குழு ஆணையத்தின் தலைவரான பிரகோசா தாஸ் “இறுதிச்சடங்கு மார்ச் 15 அன்று நடைபெற்றது. அப்போது அரசாங்கம் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை.மேலும் அரசு ஊரடங்கு உத்தரவை அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மார்ச் 16 அன்று அனைத்து இஸ்கான் கோயில்களும் மூடப்பட்டு விட்டன.” என விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்கானில் இருந்து இதுவரை 21 பேருக்கு நோய் தோற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் 100 க்கும் மேற்பட்ட கிருஷ்ணா பக்தர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் கூறி வருகின்றனர். அதற்கேற்ப கிருஷ்ணா பக்தர்களிடையே கோவிட் -19 நோய் தோற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஐ விட அதிகமாக இருக்கக்கூடும் என்று பிரகோசாவும் ஒப்புக் கொண்டார்.
பிரகோசா மேலும் கூறுகையில்
“ஹரே கிருஷ்ணா என்று பஜனை செய்வதால் இந்த நோய் தொற்று நின்றுவிட போவதில்லை .பல பக்தர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சோகமான நிலையில் காலமானதைக் கண்டோம். எனவே நமது அரசாங்கங்களின் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் கட்டளைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.”
“ தயவுசெய்து இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணா பக்தர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். அவர்கள் செய்யக்கூடாத ஒன்றை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. அவர்கள் பின்பற்ற வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியதாகவே கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நினைத்தார்கள். எனவே தயவுசெய்து அவர்களுக்கு அவர்களுக்காக பிரார்த்திக்கவும். ”
என கூறினார்.
இஸ்கான் கூட்டம் vs தப்லீக் மாநாடு:
இஸ்கான் கூட்டம் போல தான் டெல்லியில் (அரசு அனுமதியுடன் நடந்த) தப்லீக் மாநாடு நடைபெற்ற சமயத்திலும் அரசாங்கம் எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒரு வாரம் முன்னரே அந்த நிகழ்வும் நிறைவடைந்து இருந்தது.
எனினும் இந்தியாவின் பெரும்பான்மை மீடியாக்கள் மற்றும் பாசிச சிந்தனையாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். பரவி வரும் நோய்க்கு எதிராக ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கும் வகையில் வைரசுக்கு மதச்சாயம் பூசி மகிழ்ந்தனர். மேலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே கொரோனா பரப்புவதாக பொய்யான மற்றும் அரைகுறை செய்திகளை பரப்பினர்.
முஸ்லீம் பெயர் தாங்கிய பாஜக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தப்லீக் ஜமாத் கொரோனா பரப்பியதன் மூலம் ‘தாலிபானி குற்றம் செய்துள்ளது’ என்று கூறி வெறுப்பு பிரச்சாரத்துக்கு தன் பங்கை ஆற்றினார்.
இங்கிலாந்திலோ இவ்வாறு எல்லாம் நிலைமை இல்லை. அரசும் சரி, அந்நாட்டு மக்கள் மற்றும் ஊடகங்களும் சரி கொரோனா நோய் தொற்றை எந்த மதத்துடனும் இணைத்து பேசி விஷத்தை கக்கவில்லை, நோயை தடுக்க ஆக்கபூர்வமான பணிகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.