Picture credit: network18
இந்தியாவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றுதான் CNN நியூஸ்18. இந்த ஊடகம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் நெட்வொர்க் 18ஆல் வாங்கப்பட்டது. ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
அதே சமயம் தமிழில் இதே ஊடகம் நடுநிலையான ஊடகமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு நியூஸ் 18 ஊடகம் பொய் செய்தி வெளியிடுவது இதுவே முதல் முறை இல்லை.
இந்நிலையில் நேற்று ஜூலை 29 ஆம் தேதி மதியம் இரண்டு 16 மணிக்கு நியூஸ் 18 ஊடகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
டீவீட்டின் தமிழாக்கம் :
“ஜாகிர் நாயக்கிற்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திற்கு ஆதாரத்தை(?) வளங்கிவிட்டது. அதனால் மலேசியா நாடு ஜாகிர் நாயக்கிற்கு தொடர்ந்து புகலிடம் அளிக்க மறுத்து, நாட்டை விட்டும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. யுஏஇ (UAE) மற்றும் சவுதி அரேபியாவும் ஜாகிர் நாயக் கிற்கு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டது. “என்பது தான் அந்த செய்தி.
ஆனால் பிரபல மலேசியா ஊடகமான freemalaysia today செய்தி தளம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கிற்கு புகலிடம் அளிக்காது என்று வெளியான செய்தி பொய்யாகும் . இவ்வாறு எந்த அறிக்கையும் அரசுத் தரப்பிடம் இருந்து வெளியிடவில்லை என்று உறுதிப்படுத்தினர்.இவ்வாறு உண்மை செய்தி வெளியான பின்பும் நெட்வொர்க் 18 ஊடகம் இதுவரை மேற்குறிப்பிட்ட செய்தியை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட வீடியோவில் ஜாகிர் நாயக் பேசுவது போல் பேக்ரவுண்டில் உள்ளதை கவனித்திருக்கலாம்.
அதன் முழு ஒரிஜினல் வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது
ஜாகிர் நாயக் மறுப்பு :
மேலுள்ள வீடியோவில் தனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டும் இன்டர்போல் மீண்டும் நிராகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதை நியூஸ் 18 ஊடகம் மியுட் செய்து வீடியோவை மட்டும் காட்டி பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.ஜாகிர் நாயக் மேலும் கூறுகையில் ஆரம்பத்தில் தன் மீது “தீவிரவாத குற்றச்சாட்டு” சுமத்தி வந்த அரசாங்கம் பின்னர் அதில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லாததால், “வெறுப்பு பேச்சை” பேசுபவர் என்று கூறியது பிறகு அதிலும் எந்த விதமான ஆதாரமும் காட்ட முடியாததால், “பண மோசடி” என்ற குற்ற வழக்கில் கைது செய்ய துடிக்கிறது. ஆனால் இதில் எதுவும் உண்மை இல்லை நான் இவர்கள் கூறும் எந்தவிதமான குற்றத்தையும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தன் IRF அமைப்பை இந்திய அரசாங்கம் தடை செய்த சமயத்தில், தன் அலுவலகத்திற்கு NIA அதிகாரிகள் சோதனையிட வந்தனர். 2 நாட்களுக்கு மேல் நடந்த சோதனையில் தீவிரவாதம் குறித்த எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காததால் திரும்பி சென்றனர். அப்போது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் மேலிட அழுத்தத்தின் காரணத்தினால்தான் தொடர்ந்து இவ்வாறு சோதனை நடைபெறுவதாக கூறினார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில்: பல மணி நேரம் ஜாகிர் நாயக் பேச்சை கேட்டு அவரின் பேச்சில் இருந்தே ஜாகிர் நாயக்கிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டி தருமாறு கூறி இருந்தார். நான்3 முறை கேட்ட பிறகும் என்னால் எந்தவிதமான ஆதாரத்தையும் திரட்ட முடியவில்லை என்று மேலதிகாரியிடம் கூறினேன். நான்காவது முறையும் என்னை ஆய்வு செய்ய சொன்னபோது நான் என்னுடைய ஜூனியர் நபர்களிடத்தில் கூறினாலும் அவர்கள் நான் கேட்டதை போன்று கேட்டால் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய விடக்கூடும் என அஞ்சுகிறேன் என்று அந்த அதிகாரி கூறியதாக ஜாகிர் நாயக் மேலுள்ள வீடியோவில் கூறுகிறார்.
மேலும் “சத்திய மேவ ஜெயதே”, உண்மையே வெல்லும் என்று கூறி தன் பேச்சை முடித்து கொண்டுள்ளார்.எனினும் ஜாகிர் நாயக்கின் இவ்வாறான பேச்சை மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. ஜாகிர் நாயக் குற்றவாளி தான் என்பது தான் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.