சேலம், அன்னதானப்பட்டி, சண்முகா நகரில் பாதுஷா மைதீன், 28, என்பவர் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்தி வந்தார். வட மாநிலங்களை போல தமிழ் நாட்டில் மாட்டிறைச்சி விற்க எந்த தடையுமில்லை. இந்து மக்களும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்து முன்னணியினர் அருகில் முனியப்பன் கோவில் உள்ளதாக கூறி அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்ததால் பாதுஷாவின் கடை தற்போது மூடப்பட்டு விட்டது.
28-07-22 அன்று இரவு அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். உதவி கமிஷனர் அசோகன், பேச்சு வார்த்தை நடத்தி கடையை மூடச்செய்தார்.
போலீசார் ஒரு பக்க சார்புடன் நடந்து கொண்டதால் அதே இடத்தில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தப்போவதாக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.