பிரதமர் மோதி அரசு பயணமாக சவுதி அரேபிய செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மோதி அரசாங்கம் அனுமதி கோரி இருந்தது. எனினும் காஷ்மீரிகள் விஷயத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் அனுமதிக்க முடியாது என்று கூறி வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் மோதி அரசாங்கம் சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் (ஐ.சி.ஏ.ஓ) இது குறித்து புகார் தெரிவித்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ” எங்கள் விதிகள் பொதுமக்கள் விமானங்களின் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், மாநில/ இராணுவ விமானங்களுக்கு பொருந்தாது. தேசிய தலைவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் “அரசு விமானம்” என்ற பட்டியலில் வர கூடியவை, எனவே இது எங்கள் விதிகளுக்கு உட்பட்டது அல்ல ” என்று தெரிவித்துள்ளது மோதி அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. புகார் கொடுக்கும் முன்னர் ஒரு அமைப்பின் விதிமுறை,கட்டுபாடுகள் பற்றிய அறிவு இருப்பது மிகவும் அவசியம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Download our app from Playstore: http://bit.ly/2nOa5Wp