ஜனவரி 26 ஆம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி பல்வேறு மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
பேரணி நடைபெறும் முக்கிய இடங்கள்:
வாஷிங்டன் டி.சி. இந்திய தூதரகத்திற்கு அருகிலுள்ள வளாகத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை .. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, அட்லாண்டா மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்னால் என பல்வேறு இடங்களின் இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.
“இந்திய அரசு உடனடியாக CAA ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் NPR மற்றும் NRC க்கான அதன் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்” என்று கூட்டமைப்பின் சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகரில் மாநாட்டுக்கு ஏற்பாடு:
இதற்கிடையில், இந்திய-அமெரிக்க முஸ்லீம் கவுன்சில், அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில், எம்கேஜ் ஆக்ஷன் மற்றும் மனித உரிமைகளுக்கான இந்துக்கள் இயக்கம் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஜனவரி 27 அன்று அமெரிக்க தலைநகரில் CAA குறித்து காங்கிரஸின் மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்), அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உயர்மாட்ட வல்லுநர்கள் குழு – சி.ஏ.ஏ குறித்த விரிவான பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கை வழங்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.