ஜூலை 18 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத்நகரில் ஒரு பைக் மற்றும் டிரக் மோதி கொண்டதில் விபத்து ஏற்படுகிறது.
விபத்தில் சிக்கிய ஒருவர் தன் துணைக்கு இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரை தன் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் அங்கு வந்து கல்வீச்சில் ஈடுபடத் துவங்குகின்றனர். போர்க்களம் போல் மாறிய அப்பகுதி சற்று நேரத்தில் ஒரு மதக்கலவரமாக ஆகி விடுகிறது. கடைகள் வாகனங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகின்றது. அங்கு உள்ள மக்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.
போலீசார் அந்த இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தியதால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.இந்த கோரத்தாண்டவத்தில் முஸ்லிம்களின் பல்வேறு வியாபார ஸ்தலங்கள், கடைகள் முற்றிலுமாக அழிக்க பட்டுவிட்டன.
இதை தொடர்ந்து அங்குள்ள முஸ்லிம் பொதுமக்கள் கடும் அச்சத்தில், பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து உதவி கோரிய வண்ணம் உள்ளனர். இந்த செய்தியை மேற்கு வங்கத்தின் பல்லாண்டு கால, பிரபல உருது பத்திரிகையான அக்பார் இ மஷ்ரிக் மட்டுமே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இந்து யுவ வாகினி என்ற இந்துத்துவ அமைப்பு உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு விதமான வன்முறை சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.